'அவன் மேல தான் எனக்கு லவ் இருக்கு'... 'மனைவிக்கு காத்திருந்த எதிர்பாராத அதிர்ச்சி'... மருத்துவர் எடுத்த அதிரடி முடிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Oct 09, 2020 05:34 PM

வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அந்த இளைஞரையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gay Wedding in US in Traditional Kodava Attire

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பொல்லரிமாடி கிராமத்தை சேர்ந்தவர் சரத் பொன்னப்பா. இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். மருத்துவரான சரத் பொன்னப்பா அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு வட இந்தியாவைச் சேர்ந்த வாலிபரான  தருண் சந்தீப் தேசாய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறியது. ஒரு கட்டத்தில் இருவரும் ஓரினசேர்கையாளராக மாறினார்கள். இந்த விவகாரம் அவரது மனைவிக்குத் தெரிய வந்த நிலையில் அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இதற்கிடையே சரத் பொன்னப்பா, ருண் சந்தீப் தேசாய்யுடன் நெருக்கமாக இருந்ததால் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதனால் அவரது மனைவியை விவாகரத்தும் செய்தார். இந்நிலையில் கடந்த மாதம்  25-ந்தேதி சரத் பொன்னப்பா, தருண் சந்தீப் தேசாயை திருமணம் செய்துகொண்டார். அதாவது மணமக்களுக்கு எப்படி திருமணம் நடைபெறுமோ அதுபோல் இருவரும் புதிய ஆடைகள் அணிந்து திருமணம் செய்துள்ளனர். அதாவது இருவரும் கொடவா சமுதாய மக்களின் பாரம்பரிய உடை அணிந்து, நீண்ட வாள், கத்தி, தலைப்பாகை உள்ளிட்டவை அணிந்து கொடவா சமுதாய பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

Gay Wedding in US in Traditional Kodava Attire

அமெரிக்காவில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இவர்களது திருமணம் நடைபெற்றது. சரத் பொன்னப்பா- சீக் தருண் சந்தீப் தேசாய் ஆகியோரின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சரத் பொன்னப்பா தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார். அது தற்போது வைரலாகி வருகிறது. இதற்கிடையே சரத் பொன்னப்பா செய்து கொண்ட ஓரினச்சேர்க்கை திருமணத்திற்குக் குடகில் வசித்து வரும் கொடவா சமுதாய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Gay Wedding in US in Traditional Kodava Attire

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்துப் பேசிய குடகு கொடவா சமுதாய நிர்வாகி ஒருவர், ''இந்த திருமணம் இயற்கைக்கு விரோதமானது. இவ்வாறு திருமணம் செய்துகொள்பவர்கள் நீண்ட நாட்கள் சேர்ந்து வாழ முடியாது. இதுபோன்ற ஓரினச் சேர்க்கை திருமணங்கள் வெளிநாடுகளில் சகஜம். ஆனால் நமது கலாச்சாரத்திற்கு இது எதிரானது. அவரை நாங்கள் மன்னிக்கமாட்டோம்'' என அவர் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Gay Wedding in US in Traditional Kodava Attire | India News.