VIDEO : "சார், அந்த 'கோழி' பண்ணை'ல.." போலீசாருக்கு கிடைத்த 'பரபரப்பு' தகவல்... போய் 'சோதனை' போட்டது'ல ... பதுங்கு'குழி'யில் காத்திருந்த 'அதிர்ச்சி'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் சமீபகாலமாக போதை பொருள் பிரச்சனை மிகப்பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக சில முன்னணி நடிகைகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 1350 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்திற்கும் கஞ்சா எங்கிருந்து வருகிறது என தெரியாமல் போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, நாகநாதா மற்றும் சந்திரகாந்தா என்ற இருவர் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவைக் கொண்டு வந்து கோழிப் பண்ணை ஒன்றில் பதுங்குக்குழி அமைத்து கர்நாடக மாநிலம் முழுவதும் விற்பனை செய்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
உடனடியாக, அந்த கோழிப்பண்ணை சென்ற போலீசார், அங்கிருந்த இருவரையும் கைது செய்து சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான 1350 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள் பெங்களூர் கொண்டு வரப்பட்டது.
இந்த வழக்கில் திறமையாக செயல்பட்ட போலீசாரை பாராட்டி 2 லட்ச ரூபாயை பெங்களுர் மாநகர காவல் ஆணையர் வழங்கியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் 6 கோடி ரூபாய் மதிப்பில் கஞ்சா பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். தொடர்ந்து, விசாரணைகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
In @BlrCityPolice biggest drug haul ever, 1,350 kgs of #Ganja was seized and 4 were arrested. The contraband was smuggled from #Odisha n was hidden underground in a sheep farm in #Kalaburagi district @XpressBengaluru @santwana99 pic.twitter.com/zQHkTDzGnd
— MG Chetan (@mg_chetan) September 10, 2020