320 அப்ளிகேஷன்களுக்கு ஆப்பு.. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் சொன்ன தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் இதுவரையில் பாதுகாப்பு காரணங்களுக்காக 320 அப்ளிகேஷன்களை முடக்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற கூட்டம்
டெல்லியில் நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியது. அவை துவங்கியவுடன் சுதந்திர போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோரது நினைவுநாளையொட்டி அவர்களுக்கு உறுப்பினர்கள் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா,"பகத்சிங் உள்ளிட்டோரின் தியாகம், எப்போதும் நினைவுகூரப்படும். இனிவரும் தலைமுறையினருக்கு அவர்களது தியாகம் உந்துசக்தியாக திகழும்" என்றார்.
அதன் பிறகு மக்களவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் பதில் கூறினர்.
320 செயலிகள் முடக்கம்
மக்களவை கேள்வி நேரத்தின் போது பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை மந்திரி சோம் பிரகாஷ் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக இதுவரையில் 320 அப்ளிகேஷன்களை மத்திய அரசு முடக்கி இருப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்,"தேச பாதுகாப்புக்காக தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் இதுவரை 320 செல்போன் செயலிகளை மத்திய அரசு முடக்கி இருக்கிறது. 21 மத்திய அமைச்சகங்களின் 146 வகையான அங்கீகாரங்களை பெற, ஒற்றை சாளர முறையில் விண்ணப்பிக்கும் வசதி அமலுக்கு வந்துள்ளது" என்றார்.
மீண்டும் முடக்கம்
நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, ஒற்றுமை அரசின் பாதுகாப்பு ஆகியவை காரணமாக செயலிகள் முடக்கப்பட்டதாக கூறிய அமைச்சர், ஏற்கனவே முடக்கப்பட்ட செயலிகள் வேறு பெயர்களுடன் இயங்கி வந்ததை கண்டறிந்து அவற்றை மீண்டும் முடக்கியுள்ளதாக தெரிவித்தார். கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 49 அப்ளிகேஷன்களை மறுமுடக்கம் செய்திருப்பதாக அமைச்சர் பேசும்போது குறிப்பிட்டார்.
சட்டம்
மொபைல் போன் பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் நோக்கில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்ததாக தெரிவித்த அமைச்சர், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, விதி 69 ஏ வின் கீழ் 320 செயலிகளின் பயன்பாடு முடக்கப்பட்டது" என்றார்.
"கோவிலில் விஐபி வரிசை.. கடவுளே மன்னிக்கமாட்டாரு".. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி போட்ட உத்தரவு..!

மற்ற செய்திகள்
