"இந்த நூற்றாண்டோட ஹிட்லர் தான் புதின்.. இத மட்டும் அவரு பண்ணலன்னா மூன்றாம் உலக போர் கன்ஃபார்ம்.." எச்சரிக்கும் உக்ரைன் எம்.பி
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே தற்போது போர் நடைபெற்று வருகிறது. முன்னதாக, நாட்டின் எல்லை தொடர்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே மோதல் இருந்து வந்தது.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த நேற்று உத்தரவிட்டிருந்தார். அதன் படி, உக்ரைன் நாட்டுக்குள் புகுந்த ரஷ்ய படைகள், குண்டு மழை பொழிந்து வருகிறது.
உக்ரைன் நாட்டிற்கு நோட்டா படைகளும், அமெரிக்கா மற்றும் ஐரோப்ப நாடுகள் ஆதரவாக உள்ளது. இன்னொரு பக்கம், இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள், ரஷ்யாவிற்கு ஆதரவாக உள்ளது.
உக்ரைன் அதிபர்
முதலில், உக்ரைன் தலைநகரான கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய படைகள் தாக்கத் தொடங்கியது. அது மட்டுமில்லாமல், உக்ரைனின் பல நகரங்களில், ரஷ்ய படைகள் குண்டு போட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில், ராணுவத்தினர், பொது மக்கள் உட்பட 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 300 க்கும் மேற்பட்டோர் வரை காயமடைந்திருப்பதாகவும், உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் உலக போர்
இந்நிலையில், ரஷ்யாவின் படையெடுப்பு பற்றி, உக்ரைன் நாட்டின் எம்.பி Oleksii Goncharenko எச்சரிக்கை விடுத்துள்ளார். 'புதின் தான் 21 ஆம் நூற்றாண்டின் ஹிட்லர். இந்த நூற்றாண்டில், ஐரோப்பாவின் நடுப்பகுதியில், போர், கொலைகள் மற்றும் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். குண்டு வீச்சு, ராக்கெட் தாக்குதல்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இது பற்றி வெளிப்படுத்துவதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. புதின் தற்போது நிறுத்தாவிட்டால், நிச்சயம் மூன்றாம் உலக போர் வெடிக்கும்.
அச்சத்தில் மக்கள்
அவர் உக்ரைனோடு நிறுத்தப் போவதில்லை. அடுத்தடுத்து முன்னோக்கி நகர்வார். அடுத்து பால்டிக் நாடுகளாக இருக்கும், பின்னர் போலாந்தாக இருக்கலாம். தற்போது உக்ரேனியர்கள் அவர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையும் பாதுகாக்கிறார்கள். மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். பலரும், நாட்டின் மேற்கை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.
தடை விதிக்க வேண்டும்
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும். ஒவ்வொரு ரஷ்ய எண்ணெய் பீப்பாயிலும், ஒவ்வொரு கன மீட்டர் ரஷ்ய எரிவாயுவிலும், உக்ரேனியரின் ரத்தம் கலந்துள்ளது' என Oleksii Goncharenko தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபரை 21 ஆம் நூற்றாண்டின் ஹிட்லர் என உக்ரைன் எம்.பி தெரிவித்துள்ள வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
