“எங்க அம்மாவ அடிச்சு வெரட்டிட்டு, என்ன தினமும்”.. 17 வயது மகளுக்கு தந்தை செய்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jan 14, 2020 07:15 PM
ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டும் தந்தை ஒருவர் தினமும் குடித்துவிட்டு தனது மனைவியை அடித்துள்ளார். தனது 17 வயது மகள் வீட்டில் இருக்கும் நிலையில், மனைவியை அடித்து வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

அதன் பின், அன்று இரவு முதல் பெற்ற மகளையே தொடர் பலாத்காரம் செய்யத் தொடங்கியுள்ளார். இதை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மகளை மிரட்டியுள்ளார். எனினும் அந்த 17 வயது இளம் பெண் கர்ப்பமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்த அப்பெண்ணின் தந்தை தனது மகளுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை மாத்திரை கொடுத்துள்ளார். அன்று இரவு, தனது பெற்றோரின் வீட்டில் அப்பெண்ணின் அம்மா திரும்பி வந்தபோதுதான், தனது தாயிடம் அப்பெண் உண்மையைக் கூறியுள்ளார்.
இதனையடுத்து தாய், மகள் இருவரும அளித்த புகாரின் அடிப்படையில், தொடர் பலாத்காரம், சிறார் வன்புணர்ச்சி உள்ளிட்ட வழக்குகளில் ஆட்டோ டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
