‘முன்னாள் கேப்டனுக்கு அடித்த அதிர்ஷ்டம்’... 'புதிதாக துவங்கப்படும்’... ‘விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின்’... 'முதல் வேந்தராக நியமனம்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Sep 14, 2019 08:24 PM

அரியானா மாநிலத்தில் தொடங்கப்பட உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நியமிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kapil Dev appointed Chancellor of Haryana Sports University

இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே விளையாட்டுக்கு என தனி பல்கலைக்கழகங்கள் இதுவரை உள்ளன. இதற்கிடையில், இளைஞர்களிடையே விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக, விளையாட்டுத் துறைக்கென தனி பல்கலைக்கழகம் நிறுவுவதற்கு அரியானா மாநில அரசு, ஆலோசித்து வந்தது. இதையடுத்து, அரியானா மாநில சட்டப்பேரவைத் தொடரில், விளையாட்டுக்கென தனிப் பல்கலைக்கழகம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம், அம்மாநில அரசு தனிப் பல்கலைக்கழகம் அமைக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து, அரியானாவின் சோனேபட் மாவட்டத்தில் ராய் நகரில், தொடங்கப்பட உள்ள மாநில விளையாட்டு பல்கலைகழகத்தின் முதல் வேந்தராக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனாக கபில் தேவ் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் வேந்தராக கபில் தேவ் நியமிக்கப்பட்டதை, அரியானா மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அனில் விஜ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Tags : #KAPILDEV #HARYANA #SPORTSUNIVERSITY