'என்ன ஸ்கெட்ச்சா'... 'முதல் முறையா ட்விட்டர் வச்ச செக்கிங் பாய்ண்ட்'... பரபரப்பை கிளப்பியுள்ள சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்முதல் முறையாக ட்விட்டர், டிரம்பின் டுவீட்களை உண்மை சோதனை அறியும் லேபிளிட்டு உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ட்விட்டரில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பார். அவர் பதிவிடும் சில பதிவுகளுக்கு, எப்போதுமே பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது. இந்நிலையில் டிரம்பின் இரண்டு டுவீட்களை உண்மை சோதனைக்கு மெயில்-இன் வாக்களிப்பில், உண்மைச் சரிபார்ப்பு எச்சரிக்கை லேபிளுடன் குறியிட்டுள்ளது. இது தான் தற்போதைய பரபரப்புக்குக் காரணம்.
இதற்கு முக்கிய காரணம் செவ்வாயன்று டிரம்ப் போட்ட இரண்டு ட்விட்டர் பதிவுகளில் இந்த லேபிள் கொடுக்கப்பட்டு உள்ளது. அதிலும் முதல்முறையாக டிரம்ப்பின் டுவீட்களை ட்விட்டர் உண்மை சோதனை செய்ய லேபிளிட்டு உள்ளது.
இதனிடையே தீங்கு விளைவிக்கும் மற்றும் தவறாக வழிநடத்தும் தகவல்கள் பரவலைத் தடுப்பதற்காக, மார்ச் 11 முதல்,ட்விட்டர் சர்ச்சைக்குரிய அல்லது தவறான தகவல்களைக் கொண்ட சில ட்விட்டர் பதிவுகளில், புதிய லேபிள்களையும் எச்சரிக்கை செய்திகளையும் அறிமுகப்படுத்தியது, குறிப்பிடத்தக்கது.