ஆட்டுக்கு 'மணி' கட்டுறது விட 'மாஸ்க்' கட்டுறது தான் முக்கியம்...! புலிக்கு கொரோனா வந்த உடனே பதறிட்டேன், அதனால்தான்... ஆடுகள் மேல் கரிசனம் காட்டும் நபர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Apr 09, 2020 12:12 PM

தனது பண்ணையில் உள்ள ஆடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவிடக் கூடாது என அணைத்து ஆடுகளுக்கு தெலுங்கானாவை சேர்ந்த ஒருவர் மாஸ்க் காட்டியுள்ளார்.

A person who built a mask for goat in fear of coronavirus

வொவ்வால்களில் இருந்து எறும்பு தின்னிக்கு பரவிய கொரோனா வைரஸ், சீனாவின் விலங்கு மார்க்கெட் சந்தையிலிருந்து மனிதர்களுக்கு பரவியுள்ளது என ஆய்வுகளில் குறிப்பிடுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வரும் கொரோனா வைரஸ் உலகெங்கிலும் இதுவரை சுமார் 1,518,783 பேரை பாதித்துள்ளது. இந்த கொடிய வைரசால் இதுவரை 88,505 மக்கள் உயிரிழந்துள்ளனர்.

வல்லரசு நாடுகள் கூட இதன் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க முடியாமல் மனித உயிர்களை இழந்து வருகிறது. மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக, கடந்த வாரம் அமெரிக்காவின் வனவிலங்கு பூங்காவில் பணிபுரியும் ஒரு காவலரிடம் இருந்து, அவர் பராமரித்து வந்த ஒரு புலிக்கும், ஒரு சிங்கத்திற்கு தொற்றியுள்ளது.

தற்போது மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், உலக வனவிலங்கு மையம் அனைத்து உயிரியல் பூங்காக்களையும் கவனத்துடன் பராமரிக்க வலியுறுத்தியது. இதை அறிந்த தெலுங்கானா மாநிலம் கம்மம்  பகுதியில் பண்ணை நடத்திவரும் வெங்கடேஸ்வர ராவ், தனது பண்ணையில் இருக்கும் ஆடுகளுக்கு முகக்கவசம் அணிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, அமெரிக்காவில் புலிகளுக்கு கொரோனா வைரஸ் பரவியதை கேள்விப்பட்டு பதறிப்போய்விட்டேன். நான் என் ஆடுகளை என் பிள்ளைகள் போல் வளர்த்து வருகிறேன். என் பண்ணையில் 20 ஆடுகள் உள்ளன. இதை நம்பி தான் நாங்கள் குடும்பம் நடத்துகிறோம்.

அதற்கு எந்த நோயும் வர நான் விடமாட்டேன். கொரோனா வைரஸ் மூச்சுக்குழல் மூலம் உடலுக்கு நுழைவதாக டி.வி-யில் சொல்கிறார்கள். அதை தடுக்க மாஸ்க் அணிய வேண்டும் என்றும் விளம்பரங்களில் பார்த்தேன். அதனால் தான், என் ஆடுகளுக்கு மணி கட்டுவதை விட மாஸ்க் அணிவிப்பது முக்கியம் என உணர்ந்து மாஸ்க் காட்டினேன். நானும் வெளியே எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து தான் செல்கிறேன்' என வெங்கடேஸ்வர ராவ் கூறியுள்ளார்

Tags : #MASK #GOAT