Jango Others

‘இந்த’ மாதிரியான பாஸ்வேர்டுகள் வச்சிருக்கீங்களா? நீங்கதான் டார்கெட்… கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க..! எச்சரிக்கும் போலீஸ்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Behindwoods News Bureau | Nov 22, 2021 08:03 AM

இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் குறித்த பட்டியல் ஒன்றை மும்பை போலீஸார் வெளியிட்டுள்ளனர். இந்த பாஸ்வேர்டுகள் எல்லாம் ஹேக்கர்களால் எளிதாக ஹேக் செய்யப்படும் என்றும் மும்பை போலீஸார் எச்சரிக்கை கொடுத்துள்ளனர். இதனால் கடினமான பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்தவும் மக்களிடம் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.

These easy passwords are hackers target, warns police

‘123456’ என பாஸ்வேர்டு வைத்திருக்கிறீர்களா? எளிதாக ஞாபகம் வைத்திருக்கும்படியான பாஸ்வேர்டுகள் இருந்தால், நீங்க தான் ஹேக்கர்களின் முதல் டார்கெட். அதனால், குறிப்பிட்ட பாஸ்வேர்டுகளை எப்போதுமே பயன்படுத்தக் கூடாது என ஒரு பட்டியலை மும்பை போலீஸார் வெளியிட்டு அறிவுறுத்தி உள்ளனர். எளிமையான நம்பர்கள் உடன் பாஸ்வேர்டுகள் வைத்திருந்தால் அதை ஒரே விநாடியில் ஹேக் செய்துவிடலாமாம்.

These easy passwords are hackers target, warns police

இந்தியாவின் மிகவும் பிரபலமான பாஸ்வேர்டுகளாக, ‘123456’, ‘1234567’, ‘12345678’, ‘123456789’, ‘1234567890’ ஆகிய பாஸ்வேர்டுகளை இந்தியர்கள் அதிகமாகவே பயன்படுத்துகிறார்களாம். மேலும், NordPass என்னும் ஆய்வு நிறுவனம் பாஸ்வேர்டுகள் குறித்து தொடர் ஆர்வுகள், பாஸ்வேர்டு மேலான்மை ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.

These easy passwords are hackers target, warns police

இந்த நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றின் அடிப்படையில் இந்தியாவில் அதிகம் பேர் பயன்படுத்தும் பாஸ்வேர்டு ஆக ‘password’ என்ற வார்த்தை தான் இருக்கிறதாம். மேலும், “querty”, “xxx”, “iloveyou”, “welcome” ஆகிய பாஸ்வேர்டுகள் தான் டாப் 5 பட்டியலில் இடம் பெற்றுள்ளதாம். வலிமையான பாஸ்வேர்டுகளை வைக்கும்படி பல முறை அறிவுறுத்தப்பட்டாலும் இன்றும் இளம் தலைமுறையினரே இது போன்ற எளிய பாஸ்வேர்டுகளைத் தான் இன்னும் பயன்படுத்தி வருகிறார்களாம்.

These easy passwords are hackers target, warns police

மேலும், கடவுள் பெயர்களைக் கொண்ட பாஸ்வேர்டுகளும் எளிதாக ஹேக் செய்யப்பட்டுவிடலாம் என்றும் கூறப்படுகிறது. Krishna, sairam, omsairam, saibaba, ganesh போன்ற கடவுள் பெயர்களால் ஆன பாஸ்வேர்டுகளும் இந்தியர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதேபோல், உங்கள் பெயரையே பாஸ்வேர்டுகளாக வைத்திருந்தாலும் ஹேக் செய்வதற்கு ஹேக்கர்களுக்கு எளிதாக இருக்குமாம்.

Tags : #POLICE #STRONG PASSWORDS #EASY PASSWORDS #PASSWORDS HACKING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. These easy passwords are hackers target, warns police | India News.