எங்க TEAM-ன் KGF ராக்கி இவருதான்… செம்ம மாஸான புகைப்படத்தை வெளியிட்ட RCB!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Vinothkumar K | May 12, 2022 08:47 PM

RCB அணியின் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியான தினேஷ் கார்த்திக்கின் புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.

RCB admin shared Pic Dinesh karthik resembles Rocky

ஐபிஎல் 2022…

கடந்த மார்ச் 26 ஆம் துவங்கிய ஐபிஎல் தொடர் லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு இரண்டு அணிகள் தேர்வாகிவிட்ட நிலையில், அடுத்த இரண்டு அணிகளுக்கான போட்டியில் RCB அணியும் உள்ளது. RCB அணி 12 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வென்றால் கூட போதும் ப்ளே ஆஃப்க்கு தகுதிபெற.  வழக்கமாக சொதப்பி வெளியேறும் RCB அணி இந்த ஆண்டு சீரான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தி வருகிறது.

RCB admin shared Pic Dinesh karthik resembles Rocky

RCB வரலாறு…

ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கும் அணிகளில் ஒன்றாக RCB இருந்தாலும் கடந்த ஆண்டுகளில் மோசமான தோல்விகளை சந்தித்து ரசிகர்களை ஏமாற்றியது. ஆனால் இந்த முறை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஆல்ரவுண்ட் பர்பாமன்ஸில் கலக்கி வருகிறது. அந்த அணிக்கு இந்த ஆண்டு முதல்முறையாக முன்னாள் சி எஸ்கே வீரர் டு பிளஸ்சி தலைமையேற்றுள்ளார்.

RCB admin shared Pic Dinesh karthik resembles Rocky

கலக்கும் தினேஷ் கார்த்திக்….

குறிப்பாக பெங்களூர் அணியில் தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி பினிஷ் செய்து வருகிறார். 200 க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இரண்டு அரைசதங்கள் அடித்து இந்த சீசனின் சிறந்த பினிஷராக செயல்பட்டு வருகிறார். அதையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிய “இந்தியாவுக்காக டி 20 உலகக்கோப்பையில் விளையாட என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவருகிறேன்” எனக் கூறியுள்ளார். இந்த ஆண்டு RCB கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் தினேஷ் கார்த்திக்கின் பினிஷிங் இன்னிங்ஸ் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

RCB admin shared Pic Dinesh karthik resembles Rocky

ராக்கி பாயாக தினேஷ் கார்த்திக்..

இந்நிலையில் RCB அணியின் சமூகவலைதளப் பக்கத்தில் கேஜிஎஃப் படத்தில் வரும் யாஷின் கெட்டப்போடு மார்ஃப் செய்து வெளியிட்டுள்ளது. மேலும் அதோடு “கதை தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

Tags : #DINESHKARTHIK #RCB #DINESH #KOHLI #KGF #YASH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. RCB admin shared Pic Dinesh karthik resembles Rocky | Sports News.