கணவர் உடலை அடக்கம் செய்யும் நேரத்தில் மனைவி, மகன் கைது.. போலீஸ் விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கணவரை அடக்கம் செய்யும் நேரத்தில் மனைவி, மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கீழமூவர்கரை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45). இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு இரண்டு மகன்ளும், ஒரு மகளும் உள்ளனர். சக்திவேல் தனது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் மதுபோதையில் தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் சக்திவேல் தீக்காயங்களுடன் எரிந்த நிலையில் மர்மமான முறையில் வீட்டின் அறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், மனைவி வசந்தாவிடம் விசாரித்துள்ளனர். அப்போது தன்னிடம் தகராறு செய்துவிட்டு கணவர் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய உறவினர்கள் சக்திவேலின் உடலை அடக்கம்செய்ய முடிவு செய்திருந்தனர். இதனை அடுத்து சக்திவேலின் சடலத்தை இடுகாட்டிற்கு கொண்டு சென்று தகனமேடையில் கிடத்தி இறுதிச் சடங்குகள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அறிந்த கிராம நிர்வாக அலுவலர் புகழ்வேந்தன், சக்திவேலின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி, சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக்கிற்கிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து விரைந்து வந்த போலீசார் இடுகாட்டில் இருந்த சக்திவேலின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே சக்திவேலின் மனைவி வசந்தா மற்றும் மகன் ரூபனிடம் போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டனர்.
அப்போது மனைவி வசந்தாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு சக்திவேல் மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்தது தெரியவந்துள்ளது. அதேபோல் நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மனைவி வசந்தா, சக்திவேலை சுத்தியலால் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாமடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை மறைப்பதற்கு சக்திவேலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததும் தெரியவந்துள்ளது. இதற்கு மகன் ரூபனும் உடைந்தையாகா இருந்தது போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் தாய், மகன் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/