மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிருத்வி ஷா… இப்போது எப்படி இருக்கிறார்?... வெளியான லேட்டஸ்ட் UPDATE
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான பிருத்வி ஷா டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Also Read | அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்! பிரபல ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் திடீர் மரணம்…
ஐபில் 2022…
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் லீக் போட்டிகளின் இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஏற்கனவே குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளன. அடுத்த இரண்டு அணிகளுக்குக் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியில் இருக்கும் அணிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ஒன்று. அந்த அணி வர இருக்கும் அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப்க்கு செல்ல முடியும்.
மருத்துவமனையில் பிருத்வி ஷா…
இந்நிலையில் அந்த அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிருத்விஷா டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் கடந்த சில போட்டிகளில் விளையாடவில்லை. இது அந்த அணிக்குப் பின்னடைவாக அமைந்தது. டைஃபாய்ட் காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இப்போது அவரின் உடல்நிலை பற்றிய அடுத்தகட்ட தகவல் வெளியாகியுள்ளது.
குட் நியூஸ்…
இது சம்மந்தமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “டைஃபாய்ட் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிருத்வி ஷா அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகி அணியினருடன் ஹோட்டலில் இணைந்துள்ளார். அங்கு அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்” என்று அறிவித்துள்ளது. இந்த செய்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது.
தொடரும் சந்தேகம்…
ஆனால் இன்னும் அவர் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பதாக சொல்லப்படுவதால் அடுத்தடுத்து வரும் போட்டிகளில் கலந்துகொள்வாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி நாளை பஞ்சாப் கிங்ஸ் லெவனை எதிர்த்து தங்களுடைய 13 ஆவது போட்டியை விளையாடுகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
