‘இந்த நேரத்துல அப்பா பக்கத்துல இல்லையே’.. தாலி கட்டிய கையோடு மணமகன் செய்த செயல்.. நெகிழ்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தாலி கட்டி முடித்ததும் மனைவியை அழைத்துக் கொண்டு தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக மருத்துவமனைக்கு மகன் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | ஓ.. இதுதான் காரணமா..? அம்பட்டி ராயுடு டுவீட் விவகாரம்.. மௌனம் களைத்த CSK கோச்..!
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவரதுமகன் மணிகண்டன். இவருக்கு நேற்று சுஜாலினி என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் நேற்று முன்தினம் செல்வமணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அதனால் அவர் நேற்று நடந்த மகனின் திருமணத்துக்கு வர முடியவில்லை. தந்தை அருகில் இல்லாத மனக்கவலையுடன் மணிகண்டன் திருமணம் செய்துள்ளார். இதனை அடுத்து தாலி கட்டி முடித்ததும் உடனே தனது மனைவியை அழைத்துக் கொண்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தந்தை பார்க்க மணிகண்டன் சென்றார். அங்கு தந்தை சந்தித்து மணமக்கள் ஆசிர்வாதம் பெற்றனர்.
இந்த சம்பவம் மருத்துவமனையில் இருந்த பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. தற்போது மணமக்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
