பிரசவத்தின்போது கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்.. மருத்துவமனை வளாகத்திலேயே டாக்டர் எடுத்த விபரீத முடிவு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் மருத்துவமனை வளாகத்திலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
6000 கிமீ தூரம்.. 110 நாள் ரன்னிங்.. கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்.. யாருப்பா இந்த சுஃபியா கான்
மருத்துவர்
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மருத்துவர்களான அர்ச்சனா ஷர்மா மற்றும் அவரது கணவர் இணைந்து அம்மாநிலத்தின் தௌசா மாவட்டம் லால்சொட் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்றை நிர்வகித்து வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் இந்த மருத்துவமனையில் பிரசவத்திற்காக ஒரு கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கு அர்ச்சனா ஷர்மா பிரசவம் பார்த்துள்ளார். அப்போது, அந்த கர்ப்பிணி பெண் மரணமடைந்திருக்கிறார். இதனை அடுத்து மருத்துவர் அர்ச்சனா அலட்சியத்துடன் அளித்த தவறான சிகிச்சையின் காரணமாகவே கர்ப்பிணி பெண் மரணமடைந்ததாக அந்தப் பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டம்
இதனை தொடர்ந்து மருத்துவர் அர்ச்சனா ஷர்மாவை கைது செய்யக்கோரி இறந்துபோன கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனை அடுத்து, பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் அர்ச்சனா மீது லால்சோட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விபரீத முடிவு
காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையின் மேல் தளத்தில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு சென்ற மருத்துவர் அர்ச்சனா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய தௌசா மாவட்ட எஸ்பி லால் சந்த் கயல்,"அலட்சியத்துடன் சிகிச்சை அளித்ததால் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததாக மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம், மருத்துவமனைக்கு மேலே உள்ள அவரது வீட்டில் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடைபெறுவருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், காவல்துறை வழக்குப் பதிவு செய்த விரக்தியில் சிகிச்சையளித்த பெண் மருத்துவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தீர்வல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050