‘பேட், பால் புடிச்ச கையில.. செங்கல், சிமெண்ட்’.. என்னப்பா பண்றாங்க நம்ம ‘சிஎஸ்கே’ ப்ளேயர்ஸ்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே வீரர்கள் செங்கல், சிமெண்ட் கொண்டு கட்டிடம் கட்டுவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. முதல் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.
அப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் தோனி 50 ரன்கள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதனை அடுத்து நாளை (31.03.2022) லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியே தோல்வியடைந்ததால், இப்போட்டியில் வெற்றி பெற சிஎஸ்கே அணி முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் வீரர்கள் செங்கல் மற்றும் சிமெண்ட் கொண்டு கட்டடத்தை கட்டிய வீடியோவை சென்னை அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. அந்த வீடியோவில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி, புதிய கேப்டன் ஜடேஜா, ராபின் உத்தப்பா, பிராவோ உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் பலரும் கட்டிடம் கட்டும் வேலையில் ஈடுபட்டனர். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
Coaches 👀 Team Building 🧱⬆️
🎥➡️ https://t.co/MJzFnKmfi8#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/oqYSKpEd6g
— Chennai Super Kings (@ChennaiIPL) March 29, 2022