வெளில பியூட்டி பார்லர்.. உள்ள உல்லாச விடுதி.. கஸ்டமர் போல வலைவிரித்த காவல்துறை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவில் அருகே பியூட்டி பார்லரில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுவந்த நபர்களை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்திவருகிறது.

பியூட்டி பார்லர்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரிக்கு அருகாமையில் ஒரு தனியார் அழகு நிலையம் இயங்கி வந்திருக்கிறது. இங்கு அடிக்கடி ஏராளமான ஆண்களும் பெண்களும் வந்துசெல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், இந்த பியூட்டி பார்லரில் பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக அந்த பகுதி மக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையிடமும் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஸ்கெட்ச்
இதனை அடுத்து, நாகர்கோவில் வட சேரி காவல்நிலைய அதிகாரிகள் அந்த பியூட்டி பார்லரை காண்காணிக்க துவங்கினர். இதனிடையே, நேற்று மகளிர் காவல்துறை அதிகாரி ஒருவருடன் மப்டியில் பார்லருக்கு சில அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது, பார்லருக்கு பின்புறத்தில் ரகசிய அறை ஒன்று இருப்பதை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மேலும், அந்த அறைக்குள் இரண்டு இளம் பெண்கள் மற்றும் ஒரு வாலிபர் இருந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலீசை பார்த்ததும் தப்பித்து ஓட முயன்ற நாகர்கோவிலை சேர்ந்த விஜய் என்னும் வாலிபரை காவல்துறை மடக்கிப்பிடித்து கைது செய்திருக்கிறது.
விசாரணை
பியூட்டி பார்லரின் ரகசிய அறையில் இருந்த இரண்டு பெண்களையும் காவல்துறை விசாரித்ததில் அவர்கள் கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. மேலும், அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவர்களை பாலியல் தொழிலில் தள்ளியதாக சொல்லப்படும் புரோக்கரையும் காவல்துறை கைது செய்து உள்ளது.
தலைமறைவு
இந்த அழகு நிலையத்தை நடத்திவந்த நாகர்கோவில் சிஎஸ்ஐ தெருவை சேர்ந்த பெருமாள் என்பவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும் வட சேரி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அழகு நிலையம் என்ற பெயரில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுவந்த நபர்களை காவல்துறை கைது செய்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
