‘கையெடுத்து கும்புட்டு கெஞ்சி கேக்றேன்.. கொஞ்சம் கஷ்டம்தான் .. ஆனா ப்ளீஸ்!!’ - குஷ்பு வெளியிட்ட வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குடும்பங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்காம இருக்க, அனைவரும் வீட்டிலேயே இருங்கள் என்று நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு பேசியுள்ள குஷ்பு, “பீச் பக்கம் போகலாம், என்னதான் நடக்குது என்று பாக்கலாம் என்கிற எண்ணமே வேண்டாம். இந்த 21 நாட்கள் உங்களுக்காக மட்டுமல்லாம, உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும் முக்கியமானது. தப்பித்தவறி உங்களுக்கே தெரியாமல் உங்களோடு சேர்ந்து உங்க வீட்டுக்கு வியாதி வந்தவுடன் தலையில் அடித்துக்கொள்ள வேண்டாம்.
அதனால் உங்களை தயவு செஞ்சு கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி கேட்டுக்குறோம். வெளியே போகாதீங்க. கொஞ்ச நாள் வீட்ல இருங்க. கொஞ்சம் கஷ்டம்தான். உங்க வீட்ல இருக்குற பசங்களுக்காகவும், பெரியவங்களுக்காகவும் இதை செய்ய மாட்டீங்களா? அவ்ளோ பெரிய கஷ்டமா வீட்டில் இருக்குறவங்களுக்காக இந்த தியாகத்த பண்றது. ப்ளீஸ்.. வீட்லயே இருங்க. இதுவரை
#21DaysChallenge #fightagainstcorona #StaySafe #StayAtHome #SaveLives pic.twitter.com/6ZGlLwvDJl
— KhushbuSundar ❤️ (@khushsundar) March 25, 2020
பண்ணாத விஷயங்கள வீட்லயே பண்ணுங்க”என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
