'ஒரு பிடி சோறு கிடைக்காம போராடினேன்...' 'இ-ரிக்‌ஷாவில் உணவு பொட்டலங்கள்...' சாலைவாசிகளுக்கு உணவளிக்கும் மாற்றுத் திறனாளி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Apr 08, 2020 04:57 PM

தனது குடும்பத்திற்கு உணவு இல்லாத சூழலிலும் சாலைகளில் இருக்கும் மக்களுக்கு தனது இ-ரிக்‌ஷாவின் மூலம் உணவுப்பொட்டலங்களை விநியோகிக்கும் மாற்றுத்திறனாளி தேஜ் பஹதூர் யாதயை இணையத்தில் பலர் பாராட்டி வருகின்றனர்.

Distribution of food through e-rickshaws to people on the roads

36 வயதான தேஜ் பஹதூர் யாதவ் போலியோவால் பாதிக்கப்பட்டவருக்கு இ-ரிக்‌ஷா ஓட்டும் மாற்றுத் திறனாளி ஆவார். இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுப்பதற்கு அரசு அமுல்படுத்தி இருக்கும் ஊரடங்கு உத்தரவால் வருமானம் இல்லாமல் அவரது குடும்பம் பட்டினியில் உள்ளனர்.

இவரது மனைவியும் மாற்றுத்திறனாளி என்பதால் வேறு வருமானம் இல்லாமல் தனது இரு பிள்ளைகளுடன் பசியில் தவித்து வந்துள்ளார். ஆனால் தற்போது இவர் தினமும் 1500 பேருக்கு உணவளிக்கும் பணியை செய்து வருகிறார்.

பசியில் இருந்த சூழலில் ஒருவேளை உணவு கிடைக்குமா என அலைந்து திரிந்த தேஜ் பஹதூருக்கு கோம்தி நகரில் உள்ள சமுதாய சமையல்கூடத்தில் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அங்கிருக்கும் உள்ளூர் மக்களும் அரசு அதிகாரிகளும் உணவு அளித்தனர். அவருக்கு மட்டும் இல்லாமல் அங்கு உணவு இல்லாமல் வாடும் சாலைகளில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கும் உணவளித்து உதவி வந்தனர்.

இதனை பார்த்த தேஜ் பஹதூர் அங்கேயே நின்று ஊழியர்களுடன் சேர்ந்து இவரும் உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் அடுத்த நாள் அதே இடத்திற்கு வந்து அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் தானும் இந்த சேவையில் ஈடுப்பட அனுமதி கேட்டுள்ளார். மாற்றுத்திறனாளியான இவருக்கு என்ன வேலை தர இயலும் என தயங்கியுள்ளனர் அங்கிருக்கும் அதிகாரிகள்.

ஆனால் தேஜ் பஹதூர் மிகுந்த மன வலிமையுடன் என்னிடம் இ-ரிக்‌ஷா உள்ளது அதில் உணவு விநியோகம் செய்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும்  இதற்காக அவர் எந்த வித கூலியும் வாங்கவில்லை  என்று கூறுகின்றனர் அங்கிருக்கும் அதிகாரிகள்.

தன்னலமற்ற சேவை மனப்பான்மையுடன் செயல்படும் தேஜ் பஹதூர் காலை 10 மணிக்கு வந்து, தன்னுடைய இ-ரிக்‌ஷாவில் உணவுப்பொட்டலங்களை நிரப்பி கிளம்பி விடுகிறார். மாலை வரை 1,500 உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, என்னாலும் சமூகத்துக்கு உதவ முடியும் என்று நினைக்கும் போது திருப்தி ஏற்படுகிறது என்று கூறி மனம் மகிழ்கிறார் தேஜ் பஹதூர்.

தேஜ் பஹதூர் யாதவை அவர் குடியிருப்பு மக்கள் மட்டுமல்லாது, அவரது இந்த சேவையை சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்த அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Tags : #FOOD