‘ஹைதராபாத் அணியின் முக்கிய வீரர் திடீர் விலகல்’.. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமா சிஎஸ்கே?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 23, 2019 07:18 PM

சர்ரைசர்ஸ் அணியின் முக்கிய வீரர் திடீரென விலகியுள்ளார்.

Kane Williamson flies back home following the death of his grandmother

ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7 -ல் வெற்றி, 3-ல் தோல்வி என 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முன்னதாக பெங்களூரில் நடந்த ராயல் சேல்ஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 1 ரன்னில் வெற்றி வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டது.

இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களான வாட்சன், டுபிளிஸிஸ் ஆகியோர் வெறும் 5 ரன்னில் அவுட்டாகினர். அடுத்து கைகொடுப்பார் என நம்பப்பட்ட ரெய்னாவும் முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதில் கேப்டன் தோனி மட்டுமே கடைசிவரை விளையாடி 84 ரன்கள் சேர்த்தார். மேலும் முன்னதாக ரெய்னா தலைமையில் ஹைதராபாத் அணியுடன் மோதி சென்னை தோல்வியை தழுவியது. இதனை அடுத்து இன்று(23.04.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஹைதராபாத் அணியுடன் சென்னை மோதுகிறது.

இந்நிலையில் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியன்சனின் பாட்டி திடீரென உயிரிழந்துவிட்டதால் அவர் நியூஸிலாந்து புறப்படுகிறார். இதனால் இன்றைய போட்டியில் அவர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : #IPL #IPL2019 #CSK #MSDHONI #CSKVSRH #YELLOVE #WHISTLEPODU #KANE WILLIAMSON