‘தொடர்ந்து 2 மேட்ச்ல தோத்தாச்சு, இனி ஹோம் க்ரைவுண்ட்ல ஜெயிக்க இவர்தான் கரெக்ட்’.. சிஎஸ்கேவில் மீண்டும் சுழல் மன்னன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 23, 2019 07:47 PM
சென்னை சூப்பர் தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியடைந்தை அடுத்து அணியில் முக்கிய சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7 -ல் வெற்றி, 3-ல் தோல்வி என 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முன்னதாக பெங்களூரில் நடந்த ராயல் சேல்ஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 1 ரன்னில் வெற்றி வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டது.
இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களான வாட்சன், டுபிளிஸிஸ் ஆகியோர் வெறும் 5 ரன்னில் அவுட்டாகினர். அடுத்து கைகொடுப்பார் என நம்பப்பட்ட ரெய்னாவும் முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதில் கேப்டன் தோனி மட்டுமே கடைசிவரை விளையாடி 84 ரன்கள் சேர்த்தார். மேலும் முன்னதாக ரெய்னா தலைமையில் ஹைதராபாத் அணியுடன் மோதி சென்னை தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இன்று(23.04.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஹைதராபாத் அணியுடன் சென்னை மோதுகிறது. இதில் சர்துல் தாஹூருக்கு பதிலாக மீண்டும் ஹர்பஜன் சிங் விளையாடுகிறார்.
இதனை அடுத்து இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்துள்ளது.
