‘இப்போ ஃபீல் பண்ணி என்ன பண்றது’.. ‘எதிர்பாராத நேரத்தில் தோனியின் வேற லெவல் ஸ்டெம்பிங்’.. வார்னரை கதறவிட்ட ‘தல’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 23, 2019 10:09 PM

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வார்னர், மனிஷ் பாண்டேவின் அதிரடியால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 175 ரன்களை குவித்துள்ளது.

WATCH: Dhoni sends Warner packing with lightning quick stumping

ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7 -ல் வெற்றி, 3-ல் தோல்வி என 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முன்னதாக பெங்களூரில் நடந்த ராயல் சேல்ஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 1 ரன்னில் வெற்றி வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டது.

இந்நிலையில் இன்று(23.04.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஹைதராபாத் அணியுடன் சென்னை மோதுகிறது. இதில் சர்துல் தாஹூருக்கு பதிலாக மீண்டும் ஹர்பஜன் சிங் விளையாடுகிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க ஆட்டக்காரார ஜானி பேர்ஸ்ட்டோ ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த வார்னர் மற்றும் மனிஷ் பாண்டே கூட்டணி அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. இதில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 83 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வார்னர் 57 ரன்கள் எடுத்திருந்த போது தோனியின் ஸ்டெம்பிங்கில் அவுட்டாகி வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #MSDHONI #WHISTLEPODU #YELLOVE #CSKVSRH #WARNER