இந்திய வரலாற்றில் முக்கியமான நாள்.. விமான போக்குவரத்து அமைச்சர் உருக்கம்.. ஆஹா இப்படி ஒரு பிளான் இருக்கா..?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் விமான பயணிகளின் எண்ணிக்கை 2027 ஆம் ஆண்டில் 40 கோடியாக இருக்கும் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
Also Read | JEE மெயின் 2022 தேர்வு முடிவுகள்.. செண்டம் அடிச்ச 24 மாணவர்கள்.. அசர வச்ச மாநிலம்..!
ஆகாஷ் ஏர்
பிரபல முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் ஆதித்யா கோஷ் மற்றும் வினய் துபே போன்ற விமானப் போக்குவரத்துத் துறையின் நிபுணர்களால் ஆகாசா ஏர் நிறுவனம் துவங்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் தனது முதல் விமானத்தை ஞாயிற்றுக்கிழமை மும்பையிலிருந்து அகமதாபாத் வரை இயக்கியது. தொடக்க விமானத்தை சிந்தியா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதுகுறித்து பேசிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா,"இந்தியாவில் ஒரு விமான நிறுவனம் தொடங்கப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களில், விமான நிறுவனங்கள் செயல்படுவது எவ்வளவு கடினமாக இருந்தது, உள்நாட்டில் பல பிரச்சனைகள் எழுந்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம். கடந்த 20 ஆண்டுகளில் 7 விமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன" என்றார்.
இந்திய வரலாற்றின் முக்கியமான நாள்
ஆகாஷ் ஏர் விமானத்தின் முதல் பயணத்தை துவங்கி வைத்த சிந்தியா, "இது இந்திய வரலாற்றின் முக்கியமான நாள்' என்றார். கொரோனா காலத்தில் இந்திய விமான போக்குவரத்து துறை சந்தித்த சவால்கள் குறித்து பேசிய அவர், சந்தையில் மீண்டும் மறுமலர்ச்சி ஏற்பட்டு வருவதாக தெரிவித்தார். ஜெட் ஏர்வேஸ்-ன் எழுச்சி, ஏர் இந்தியா-வின் மீள்வருகை மற்றும் இப்போது ஆகாசா ஏர் ஆகியவற்றால், விமானத் துறை வளர்ந்து வரும் சந்தையாக மாறப்போவதாக அவர் குறிப்பிட்டார்.
வருடத்திற்கு 40 கோடி பயணிகள்
இந்தியாவில் 2013-14ல் 6 கோடியாக இருந்த விமான பயணிகளின் எண்ணிக்கை 2019-20ல் 20 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து பேசிய சிந்தியா "பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 250% அதிகரிப்பை சந்தித்திருக்கிறோம். எங்கள் முன்னறிவிப்பு என்னவென்றால், 2027 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் (உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும்) 40 கோடி விமான பயணிகள் இருப்பார்கள்" என்றார்.
Also Read | "5 பேருக்கு ஸ்கெட்ச் போட்டோம்".. காதலிக்காக பழிவாங்கிய இளைஞர்.. இந்தியாவை நடுநடுங்க வச்ச சம்பவம்..!