'வயசு 22 இருக்கும்'... 'அவங்க பெத்தவங்க என்கிட்ட கேட்ட கேள்வி'... 'என் மனசை துளைச்சு எடுத்துடுச்சு'... இளம் மருத்துவர் சொன்ன அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 24, 2021 01:33 PM

22 வயது நோயாளியின் பெற்றோர் கேட்ட கேள்வி என்னை நொறுக்கியது என டாக்டர் தனது அதிர்ச்சி அனுபவங்களைப் பகிர்ந்து உள்ளார்.

Delhi doctor’s heartbreaking plea to people to wear mask goes viral

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடுகிறது என்று சொல்லும் அளவிற்கு கொரோனாவின் இரண்டாவது அலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் கொரோனா நோயாளிகளுடன் பணியாற்றிய தனது அதிர்ச்சி கலந்த அனுபவங்களை சாந்திரா செபாஸ்டியன் என்ற பெண் டாக்டர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் கூறும்போது, ''நான் முதல் ஆண்டு பயிற்சி மருத்துவர்.  கடந்த மார்ச் 30ந்தேதி கொரோனாவால் உயிரிழந்த முதல் நபரை நான் கண்டேன். அதற்கு முந்தின நான் இரவு அந்த நபர் ஐ.சி.யூ.வில் சேர்க்கப்பட்டார்.  அவருக்கு 40 வயது.  ஆபத்து நிலையில் காணப்பட்டார்.  தேறி விடுவார் என நினைத்தேன். ஆனால், அடுத்த நாள் அவர் உயிரிழந்ததில் நான் உணர்விழந்து போனேன்'' எனக் கூறியுள்ளார்.

Delhi doctor’s heartbreaking plea to people to wear mask goes viral

இதற்கிடையே அவருடன் பணிபுரிந்தவர்கள், கடந்த 2020ம் ஆண்டு இதனை விட மிக மோசம் நிறைந்த ஆண்டு என ஆறுதலுக்காகக் கூறியுள்ளனர்.  ஆனால் அதனை விடக் கொடிய ஆண்டாக 2021 மாறுவதற்கு எனக்கு வெகுகாலம் எடுத்துக் கொள்ளவில்லை எனத் தனது அதிர்ச்சி கலந்த அனுபவத்தைக் கூறியுள்ளார்.

தினமும் குறைந்தது 5 கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சைக்காக வரும் நிலையில், அவர்களில் 2 அல்லது 3 பேர் மரணத்தைத் தழுவுவதாக சாந்திரா செபாஸ்டியன் கூறியுள்ளார். அவரை மிகவும் பாதித்தது, 22 வயதுடைய கொரோனா நோயாளி ஒருவரின் மரணம். ஒவ்வொரு நாளும் 50 வயது நிறைந்த அவரது பெற்றோர் என்னிடம் வந்து பேசுவார்கள்.  

Delhi doctor’s heartbreaking plea to people to wear mask goes viral

அவனுக்கு பழங்களும், காய்கறிகளும் உண்ணக் கொடுக்கிறோம்.  அவன் நலமுடன் எழுந்து வந்து விடுவானா? என என்னிடம் கேட்டனர். அந்த கேள்வி எனது நெஞ்சை அப்படியே துளைத்து விட்டது. ஒரு கட்டத்தில் பிரார்த்தனைகள் அதிசயம் செய்யும்.  அவன் எங்களை விட்டுப் போவதில்லை என அவர்களுக்குள்ளே கூறிக்கொண்டதைப் பார்க்கும் போது இது என்ன வாழ்க்கை, ஏன் இந்த உலகத்தில் இப்படி நடக்கிறது என எண்ணத் தோன்றியது.

கடந்த 2 வாரங்களில் நிலைமை மிக மோசமடைந்து உள்ளது.  ஐ.சி.யூ.வுக்கு செல்லும் முன் ஒரு பெண் என்னிடம் கூறினார்.  என்னுடைய வீட்டில் 11 மற்றும் 4 வயதில் குழந்தைகள் உள்ளனர்.  நான் வாழ விரும்புகிறேன் என்றார். ஆனால் ஒரு சில மணிநேரங்களுக்குப் பின், அவருடைய குழந்தைகளிடம், கடைசியாக அவரது உடலை ஒரு முறை பார்க்க கூட முடியாது எனக் கூற வேண்டி இருந்தது, என வேதனையுடன் கூறியுள்ளார் சாந்திரா செபாஸ்டியன்.

Delhi doctor’s heartbreaking plea to people to wear mask goes viral

''எனது ஆரோக்கியம் மனதளவில் மறைந்து போனது.  மரணம் பற்றி கூட நான் கனவு கண்டேன்.  ஆனால் நான் பணிக்காகச் செல்வது, சிலரது வாழ்வைப் பாதுகாக்கும் வாய்ப்பினை அதிகரிக்கும். அந்த ஒரு விஷயம் தான் தொடர்ந்து என்னை இயங்கச் செய்கிறது'' என்று அவர் தெரிவித்து உள்ளார் சாந்திரா செபாஸ்டியன்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Delhi doctor’s heartbreaking plea to people to wear mask goes viral | India News.