'வாழ்வா... சாவா போராட்டம்'!.. 'இந்த ரிஸ்க் எடுக்க நீங்க தயாரா'?.. ராஜஸ்தான் அணிக்கு உள்ள கடைசி வாய்ப்பு!.. பீட்டர்சன் ஐடியா சாத்தியமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கியுள்ளார்.
2021 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. மற்ற மூன்று போட்டிகளிலும் மிக மோசமாக விளையாடி தோல்வி அடைந்துள்ளது.
அதிலும் குறிப்பாக நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 178 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர், விளையாடிய பெங்களூர் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்த இலக்கை 16.3 ஓவரில், 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் என் ஆர் ஆர் (Net Run Rate) -1.011 ஆக உள்ளது. இனிவரும் 10 போட்டிகளில் அந்த அணி கட்டாயமாக 6 அல்லது 7 போட்டிகளில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே ராஜஸ்தான் அணி விளையாடி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் அதிரடி வீரர் கெவின் பீட்டர்சன் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முக்கிய ஆலோசனை பேசியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தற்பொழுது ஆர்ச்சர் காயம் காரணமாக விளையாடவில்லை. இன்னொரு பக்கம் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். பயோ பப்பிள் காரணமாக லியம் லிவிங்ஸ்டன் இங்கிலாந்துக்குச் சென்று விட்டார். தற்போது அந்த அணியில் வெளிநாட்டு வீரர்கள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளனர்.
எனவே, அந்த அணி மற்ற அணிகளில் உள்ள வேறு வெளிநாட்டு வீரர்களை டிரேடிங் முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது சாத்தியமாக இருந்தால் இதை உடனடியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி செய்தாக வேண்டுமென்று கூறியுள்ளார்.