'நாங்க எதாவது ஹெல்ப் பண்ணனுமா?... 'இதெல்லாம் பண்ண ரெடி'... கை கொடுக்க முன்வந்துள்ள சீனா!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உதவச் சீனா முன்வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலை தலைவிரித்தாடும் சூழ்நிலையில் மருத்துவமனைகளில் போதிய இடமில்லை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதி தட்டுப்பாடு என்று நாடே திக்குமுக்காடி வரும் நிலையில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உதவச் சீனா முன்வந்துள்ளது.
எல்லையில் சீன அத்துமீறலில் ஈடுபட்டதால் இந்திய-சீன உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டது, மேலும் அந்தநாட்டு மொபைல் செயலிகள் பலவற்றை இந்தியா தடை செய்தது. இதனையடுத்தும் பெரிய உறவு விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் சீனாவின் அயலுறவு அமைச்சகம், இந்தியாவின் கொரோனா இரண்டாம் அலையினால் ஏற்பட்டுள்ள ‘மோசமான, ஆபத்தான சூழ்நிலையை’ கருத்தில் கொள்வதாகக் கூறியுள்ளது.
சீன அதிகாரப்பூர்வ ஊடகம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குச் சீன வெளியுறவு அமைச்சகம் இவ்வாறு உதவத் தயாராக இருப்பதாகப் பதிலளித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறும்போது, “கோவிட்-19 பெருந்தொற்று மனித குலத்துக்கே விரோதியாகும். இதற்குப் பன்னாட்டு ஒற்றுமையும் பரஸ்பர உதவியுமே தீர்வு” என்று கூறினார்.
மேலும், “சீனா இப்போது இந்தியாவில் தொடரும் மோசமான, ஆபத்தான சூழ்நிலையைச் சீனா கருத்தில் கொள்கிறது. அதாவது இந்தியாவில் தற்காலிகமாக பெருந்தொற்றுத் தடுப்பு மருத்துவ உபகரணங்கள், சப்ளைகள் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவுக்குத் தேவையான உதவியை வழங்க நாங்கள் எழுந்து நின்று தயாராக இருக்கிறோம். இதன் மூலம், எங்கள் உதவி மூலம் பெருந்தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவத் தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
