'எப்படி சார் உங்களால பவுலிங் போடாம இருக்க முடியுது?.. என்னமோ நடக்குது... உண்மைய சொல்லுங்க'!.. உணர்ச்சி வசப்பட்ட பாண்டியா!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14வது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 16 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.
இந்த சீசனில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் இரண்டு வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட பவுலிங் வீசவில்லை.
ஹர்திக் பாண்டியாவிற்கு சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட காயத்தால் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இதனால் இவர் தனது பழைய பவுலிங்கை இழந்துவிட்டார். தற்போது அவர் பேட்ஸ்மனாக மட்டும் அணியில் இருந்து வருகிறார். எனினும், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடரில் ஒரு சில போட்டிகளில் பவுலிங் வீசினார். அப்போது விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்.
ஆனால், இந்த சீசனில் இதுவரை நான்கு போட்டிகள் விளையாடியுள்ள ஹர்திக் பாண்டியா, ஒரு ஓவர் கூட பவுலிங் செய்யவில்லை. இது ஹர்திக் பாண்டியாவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.
இந்நிலையில், நேற்று (ஏப்.23) நடைபெறும் 17 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் அணியுடன் மோதுகியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களிடம் ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் உங்களது பவுலிங்கை நீங்கள் மிஸ் செய்கிறீர்களா என்று கேட்பட்டது.
அதற்கு ஹர்திக் பாண்டியா, "ஆமாம். நானும் எனது பவுலிங்கை மிஸ் செய்கிறேன். ஆனால் அது எனது பேட்டிங்கில் அழுத்தம் கொடுப்பதாக நான் நினைக்கவில்லை. நான் ஒரு ஆல்ரவுண்டராக என் வாழ்நாள் முழுவதும் விளையாடி இருக்கிறேன். இதனால் நான் இதையெல்லாம் சமாளித்து புன்னகையுடன் இருக்க முயற்சி செய்து வருகிறேன்" என்று பேசியிருக்கிறார்.