உயர்ந்தது கொரோனா தடுப்பூசியின் விலை...! ஒரு தடுப்பூசியோட விலை எவ்வளவு தெரியுமா...? சீரம் நிறுவனம் அதிரடி அறிவிப்பு! - அதிர்ச்சியில் பொதுமக்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தடுப்பூசி விலையை இரு மடங்காக சீரம் நிறுவனம் உயர்த்தியுள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மக்கள் கூட்டம் அனைத்து இடங்களிலும் திரண்டு வந்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது. சில இடங்களில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. ஆனால் அப்படி எந்த தட்டுப்பாடும் இல்லை. ஒரு மருத்துவமனையில் ஸ்டாக் தீர்ந்தால் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே மக்கள் வாட்சப்பில் வரும் வதந்திகளையும், அறிவியலுக்கு முரணான சிந்தனைகளை பரப்பி வரும் கருத்துகளை புறம் தள்ளி பொதுமக்கள் தடுப்பூசி போட வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இஸ்ரேல் போன்ற நாடுகளில் தற்போது கொரோனா வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு தற்போது மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை உட்பட பல தளர்வுகளை அந்த அரசாங்கம் அறிவித்துள்ளது. அதற்கு காரணம் பொதுமக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடித்தும், முறையாக தடுப்பூசி போட்டுக் கொண்டதும் ஆகும்.
தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு, அதிக அளவில் போடுவதற்கு முன்வருவதால் தடுப்பூசிக்கு அதிக தேவை உருவாகியுள்ளது, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படலாம் என அறிவித்ததால் மேலும் அதிகளவில் தடுப்பூசி தேவைப்படும்.
இந்த நிலையில் சீரம் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாநிலங்களுக்கு ஒரு டோஸ் விலை 400 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு மட்டும் ஒரு டோஸ் 150 ரூபாய்க்கு வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த திடீர் விலை உயர்வால் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும் தடுப்பூசியை தவறாமல் போட்டு கொரோனாவை அழித்தொழிப்பது நம் சமூகத்தின் முன் பெரும் சவாலாக உள்ளது.
IMPORTANT ANNOUNCEMENT pic.twitter.com/bTsMs8AKth
— SerumInstituteIndia (@SerumInstIndia) April 21, 2021