VIDEO: 'விட்டா போதும்டா சாமின்னு...' 'தெறிச்சு ஓடிய பொதுமக்கள்’... 'ஏதும் செய்ய முடியாமல்... முழிபிதுங்கி நின்ற ரயில்வே ஊழியர்கள்...! - வைரல் வீடியோ
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸை கண்டு ஓடாமல், கொரோனா பரிசோதனை செய்துகொள்ள பயந்து ஓடும் சம்பவம் பிகாரில் நடந்துள்ளது

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவிவருகிறது என சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி வரும் நிலையில், அதற்கான கட்டுப்பாடுகளும், முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விருப்பமுள்ள நபர்கள் மற்றும் 45வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிக்களும் செலுத்தப்படுகிறது.
தற்போது, பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ்குமார், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அம்மாநிலத்திற்கு வரும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி வெளிமாநிலத்தவர் அனைத்து ரயில் நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பீகார் ரயில்நிலையங்களில் பயணிகளுக்கு ஸ்க்ரீனிங் டெஸ்ட்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (15.04.2021) இரவு பீகாரின் பக்ஸார் ரயில் நிலையத்திற்கு பாட்னாவிலிருந்து வந்த ரயிலில் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்துள்ளனர். முதல்வரின் உத்தரவின் பெயரில் பயணிகளிடம் கொரோனா பரிசோதனை செய்ய முயன்ற போது, அவர்கள் ரயில் நிலையத்திலிருந்து சிதறி வெளியே ஓடியுள்ளனர்.
என்னடா இது கொடுமை, கொரோனா வைரஸிற்கு பயப்படாமல் அதனை கண்டறியும் சோதனையைக் கண்டு பயந்து மக்கள் ரயில் நிலையத்திலிருந்து ஓடும் வீடியோ இணையதளத்தில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ரயில் நிலையத்தில் இருந்த சுகாதார ஊழியர் கூறுகையில், 'முதல்வரின் வழிகாட்டுதலின் படி இப்பகுதி ரயில்நிலையத்தில் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டோம். அதனால் ரயில்நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியேறுவதைத் தடுத்தபோது, அவர்கள் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் இங்கு காவலர்கள் யாரும் இல்லை. என்னால் ஒற்றை நபராக இருந்து சமாளிக்க முடியவில்லை. பின்னர், ஒரு பெண் காவலர் மட்டும் வந்தார். ஆனால், தான் தனியாக இருப்பதால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என அவர் கூறிவிட்டார்' எனக் சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
यह दृश्य कल रात बक्सर स्टेशन का हैं और ये यात्री पुणे -पटना से उतरे हैं और कोरोना जाँच ना कराना पड़े इसलिए भाग रहे हैं @ndtvindia @Anurag_Dwary @suparba pic.twitter.com/cWxDDoP26X
— manish (@manishndtv) April 16, 2021

மற்ற செய்திகள்
