வீட்ல பற்றி எரிஞ்ச தீ-க்கு பின்னாடி இவ்ளோ உண்மைகள் இருக்கா...! 'ரூம்ல செக் பண்ணினப்போ முதல் ஷாக்...' 'சிசிடிவில 2-வது ஷாக்...' 3-வது ஷாக் தான் உச்சக்கட்டம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாலியல் தொழில் மூலம் கிடைத்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

சென்னை அசோக் நகர் பகுதியில் ராகவன் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் டெல்லியை சேர்ந்த தீபக் என்னும் இளைஞர். இவர் தி.நகரில் துணி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தீபக் தன் குடியிருப்பு காவலாளியிடம் சமைக்கும் போது தீ விபத்து நடந்துள்ளதாகவும், தனக்கு உதவி செய்யுமாறும் அழைத்துள்ளார். தீபக்கின் அறைக்கு வந்த காவலாளி அவரை கண்டு அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீபக்கை விசாரிக்கையில், சமைக்கும் பொழுது திடிரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தப்பியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் தீபக் உடலில் இருந்த இரத்தக்காயங்கள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது அறையை சோதனை செய்ய சென்ற போது அறையின் தரைப்பகுதியில் ரத்தம் சிந்திக்கிடக்க, இரத்தக் கறைகளோடு கூடிய கத்தி மற்றும் மண்ணெண்ணெய் கேன் ஆகியவை கிடந்துள்ளது.
இதன் காரணமாக தீபக்கின் செல்போன்களை ஆய்வு செய்து அவர் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட இரண்டு எண்களை எடுத்து விசாரிக்கையில், அதன் உரிமையாளர்கள் மீனம்பாக்கம் ஏர்போர்ட் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மீனம்பாக்கம் விமான நிலைய போலீசாருக்கு தகவல் அளித்த போலீசார், தீபக் இருக்கும் வீட்டின் சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்ததில் ஒரு பெண் மற்றும் ஆண் அவரின் வீட்டிலிருந்து வெளியேறியது தெரியவந்தது.
இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டு குமரன் நகர் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டனர். பிடிபட்ட இருவரும் டெல்லியயை சேர்ந்த ஹம்தன் மற்றும் நிலா அக்தர் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
தீக்காயம் அடைந்த தீபக் மற்றும் ஹமதனும் தி.நகரில் துணி வியாபாரம் செய்து வருவதும், வியாபாரத்தில் பெரிய லாபம் இல்லை என்பதால் ஹம்தன் அவர்களின் ஆலோசனைப்படி மும்பை மற்றும் டெல்லியில் இருந்து இளம் பெண்களை கூட்டிவந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பழக்கவழக்கத்தில் இருவருக்கும் நிலா அக்தர் என்பவர் அறிமுகமாகி, அவரும் வடமாநிலங்களில் இருந்து அழைத்து வரும் அழகிகளை இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே சென்னையில் வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உடனடியாக அவர்களை விமானம் மூலம் அவர்களின் மாநிலத்துக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் நிலாவை சொந்த ஊரான டெல்லிக்கு அனுப்பி வைக்கும் முன் நிலா மூலம் பாலியல் தொழிலில் கிடைத்த பணத்தை பங்கு போடுவதில் தீபக் மற்றும் ஹம்தன் ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
தீபக் விடாப்பிடியாக இருந்ததால் ஆத்திரமடைந்த ஹம்தன் நிலாவின் உதவியுடன் தீபக்கை கத்தியால் தாக்கியும், மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இதன் காரணமாகவே தீபக்கிற்கு இரத்தக்காயங்களும், தீக்காயங்களும் ஏற்பட்டுள்ளதும், அவர்கள் மூவரும் செய்து வந்த பாலியல் குற்றங்களும் வெளிச்சத்திற்கு வந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
