"மகள் கல்யாணத்த பாக்கணும்".. ICU-வில் இருந்தபடி ஆசைப்பட்ட தாய்.. திருமணம் நடந்த சில மணி நேரத்தில் நேர்ந்த துயரம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Dec 28, 2022 12:07 AM

பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது பாலி என்ற கிராமம். இந்த கிராமத்தில் லாலன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் பூனம் குமாரி வர்மா.

Daughter married in hospital after her mother wish who is in icu

இந்த தம்பதியருக்கு சாந்தினி குமாரி என்ற மகளும் உள்ளார். இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு அதற்கான வேலைகளும் நடைபெற்று வந்ததாக தகவல்கள் கூறுகின்றது. அப்படி ஒரு சூழலில் தான், கடந்த சில நாட்களாக பூனம் வர்மா இதய நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.

இதனைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை இன்னும் அதிகம் மோசம் அடைந்த நிலையில், அவரை குடும்பத்தினர் மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில், ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பூனம் வர்மாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் உயிரிழக்க கூட வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், தனது மகளின் திருமணம் தடைபடாமல் நடக்க வேண்டும் என்றும் பூனம் வர்மா விரும்பி உள்ளார். மேலும் அவரது விருப்பத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Daughter married in hospital after her mother wish who is in icu

இதனையடுத்து, பூனம் வர்மாவின் மகள் சாந்தினி குமாரிக்கும் அவருக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கும் ஐசியுவில் பூனம் வர்மாவின் கண் முன்னே வைத்து திருமணம் நடைபெற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றது. இந்த சம்பவத்தால் அங்கே இருந்தவர்கள் அனைவரும் கண் கலங்கியும் போயிருந்தனர். இந்த நிலையில் தான், மகள் சாந்தினி குமாரி திருமணம் நடந்து முடிந்த சுமார் 2 மணி நேரத்திலேயே பூனம் வர்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Daughter married in hospital after her mother wish who is in icu

உடல்நிலை மோசமானதால், மகளின் திருமணத்தை காண தாய் ஆசைப்பட்டு ஐசியுவில் வைத்து அது நிறைவேறவும் செய்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் அந்த பெண்ணின் உயிர் பிரிந்த சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #MOTHER #DAUGHTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Daughter married in hospital after her mother wish who is in icu | India News.