BREAKING: குருநாதா, நீ இங்கையும் வந்துட்டியா...? இந்தியால '2 பேருக்கு' ஓமிக்ரான் வைரஸ் கன்ஃபார்ம்...! - எந்த மாநிலத்தில்...?
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகமெங்கும் வேகமாக பரவி வருகிறது ஓமிக்ரான். இது முதலில் தென் ஆப்பிரிக்காவில் தான் கண்டறியப்பட்டது. அதற்கு பிறகு ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவியது.

இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவும் அபாயம் இருந்ததால் இந்தியாவிலுள்ள அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தன. அதோடு, தங்கள் மாநிலங்களுக்குள் வரும் வெளிநாட்டு பயணிகள் அனைவரையும் தீவிர பரிசோதனையில் ஈடுபடுத்தி அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் நேற்று(01-12-2021) 598 பேர் வெளிநாட்டு பயணிகளை தொடர் கண்காணிப்பில் வைத்து அவர்களை தனிமைப்படுத்தி இருந்தனர். அவர்களில் இரண்டு பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதன்படி இந்தியாவிலேயே கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் தொற்று உறுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 7,976 பயணிகளுக்கு பரிசோதனை எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் விளைவாக இந்தியாவில் வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. ஓமிக்ரான் வைரஸ் ஐந்து மடங்கு வேகத்தில் பரவக் கூடியது என்று மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே உருமாற்றம் அடைந்த ஆல்பா, பீட்டா ,காமா வைரஸ்களின் உள்ள சில மாற்றங்களும் ஓமிக்ரான் வைரஸில் உள்ளது என்றும் மத்திய சுகாதார துறை கூறியுள்ளது.மக்கள் பயப்பட தேவையில்லை என்றும் மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.

மற்ற செய்திகள்
