'கோவாக்சின், கோவிஷீல்டு' முதல் டோஸ் போட்டவர்களுக்கு அடித்தது யோகம்!.. பிறந்தது புதிய நம்பிக்கை!.. பச்சை கொடி காட்டிய DCGI!
முகப்பு > செய்திகள் > இந்தியாகோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கான ஆய்வு குறித்து இந்திய அரசு எடுத்துள்ள முடிவு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிரான பெரும்பாலான தடுப்பூசிகள் 2 தவணைகள் செலுத்த வேண்டிய தடுப்பூசிகளாகவே இருக்கின்றன. ஒரு தடுப்பூசியை முதல் தவணை செலுத்தி, குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு, அதே தடுப்பூசியை 2வது தவணை செலுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் இதே முறையில்தான் செலுத்தப்படுகின்றன.
எனினும், முதல் தவணையில் ஒரு தடுப்பூசியையும், 2வது தவணையில் மற்றொரு தடுப்பூசியையும் யாரும் இங்கு பரிந்துரைப்பதில்லை. இதுகுறித்த ஆய்வுகள் வெளிநாடுகளில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் முதல் தவணையிலும், 2வது தவணையிலும் வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்துகிறபோது, குறிப்பாக கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்துகிறபோது அது பாதுகாப்பானது மட்டுமல்ல, கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பான பலனை, அதாவது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் (DCGI) இன்று அனுமதி அளித்துள்ளது. இரு வகையான தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தினனால் நல்ல பயன் தரும் என ICMR வெளியிட்ட அறிக்கையை அடுத்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.