குட் 'ஸ்டூடன்ட்'னா வாங்க, 'கலெக்டர்' ஆகலாம் ... 'மகளிர்' தின ஸ்பெஷலாக ... உதயமான ஒரு நாள் 'கலெக்டர்'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Mar 04, 2020 02:16 PM

இன்னும் ஒரு சில தினங்களில் 'சர்வதேச மகளிர் தினம்' கொண்டாடப்படவுள்ள நிலையில், கலெக்டரின் ட்விட்டர் பதிவு ஒன்று வெகுஜன மக்களிடம் பாராட்டைப் பெற்று வருகிறது.

Collector from Maharastra announced a plan for Women\'s Day

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தின் கலெக்டராகவுள்ள சுமன் ராவத் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் 'சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அடுத்த ஒரு வாரத்திற்கு பள்ளிகளில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு ஒரு நாள் கலெக்டராக இருக்க வாய்ப்பளிக்கப்படும். இன்றைய கலெக்டராக ஜில்லா பரிஷத் பள்ளி மாணவி பூனம் தேஷ்முக் பணியாற்றியுள்ளார்' என பதிவிட்டு #CollectorForADay என்ற ஹேஸ்டேகையும் இணைத்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ஒரு நாள் கலெக்டராக பணியாற்றிய பின் பேசிய மாணவி பூனம் தேஷ்முக், 'ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது என் கனவு. ஒரு நாள் கலெக்டராக இருந்த தருணம் நிச்சயம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று' என கூறியுள்ளார். நாட்டில் பெண்களுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகள் நாள் தோறும் நிகழ்ந்து வரும் நிலையில் கலெக்டர் சுமன் ராவத் சந்திராவின் இந்த முன்னெடுப்பை அனைத்து மக்களும் பாராட்டி வருகின்றனர்.

 

 

Tags : #MAHARASTHRA #COLLECTOR #COLLECTOR FOR A DAY