"பிறந்தநாள் அன்னைக்கி".. கார் மேல இருந்த நாப்கினை தொட்ட பெண்.. "அடுத்த கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிடல்'ல அட்மிட் பண்ணிட்டாங்க"
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக, ஒரு நபரின் பிறந்தநாள் என்றாலே, அன்றைய தினத்தில் அவருக்கு கேக் வெட்டுவது தொடங்கி, உற்சாகம், சந்தோசம், சர்ப்ரைஸ் என அனைத்துமே பாசிட்டிவாக தான் நிறைந்திருக்கும்.
ஆனால், Houston என்னும் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிறந்தநாள் தினத்தில் காத்திருந்த அதிர்ச்சி, அவரை திகிலில் உறைய வைத்துள்ளது.
Houston பகுதியை சேர்ந்த எரின் மிம்ஸ் என்ற பெண் ஒருவர், சமீபத்தில் தனது பிறந்தநாளை கணவருடன் சேர்ந்து மதிய நேரம், ரெஸ்டாரண்ட் ஒன்றில் வைத்து கொண்டாடி உள்ளார்.
தொடர்ந்து, பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்த பிறகு தங்களுடைய காரில் ஏற எரின் சென்ற போது, காரின் கதவில் நாப்கின் ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர், அந்த நாப்கினை எடுத்து தூர வீசிய எரின், பெரிதாக அதை பற்றி யோசிக்கவே இல்லை. மேலும், கணவரிடம் அந்த நாப்கினை நீங்கள் அங்கே வைத்தீர்களா என்றும் எரின் கேட்டுள்ளார். பதிலுக்கு அவர் இல்லை எனக்கூற, ரெஸ்டாரண்ட் சென்று மீண்டும் கைகழுவி விட்டு திரும்பி உள்ளார் எரின்.
அப்படி ஒரு சூழ்நிலையில் காரில் எரின் ஏறிய பிறகு, பேரதிர்ச்சி ஒன்று அவருக்கு காத்திருந்தது. திடீரென நாப்கினைத் தொட்ட எரினின் கை விரல்கள் மரத்து போயுள்ளது. மேலும் மூச்சு விட முடியாமலும் அவர் அவதிப்பட்டுள்ளார். அவர் இதயமும் வேகமாக துடிக்க, நெஞ்சு பகுதியில் வலி எடுக்க ஆரம்பித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
உடனடியாக எரினை மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவரது உடலில் அனைத்து விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக எரினிடம் பேசிய மருத்துவர்கள், தெரியாத ஒரு பொருளில் இருந்து கடுமையான விஷம் மூலம் தான் அவரதுக்கு உடல்நிலை இப்படி மோசமானதாக கூறி உள்ளனர். மேலும், ஏதோ ஒரு விபரீத முயற்சி கடைசியில் தோல்வி அடைந்து போயுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
குணமடைந்த பின்னர், இது தொடர்பாக புகார் ஒன்றையும் எரின் மற்றும் அவரது கணவர், போலீஸ் நிலையத்தில் அளித்துள்ளனர். இப்படி ஒரு புகாரை தாங்கள் கேள்விப்படுவது இதுவே முதல் முறை என்றும் அப்பகுதியில் உள்ள போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாப்கின் ஒன்றை எடுக்க போய், அதிலிருந்த விஷம் காரணமாக, பெண்ணின் உடல்நிலை மோசமான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம், தனது வாழ்வின் பயங்கரமான ஒரு தருணம் என்றும் எரின் குறிப்பிட்டுள்ளார். விஷம் கலக்கப்பட்ட நாப்கின், எரின் காரில் எப்படி வந்தது என்பது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.