‘எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்’!.. மணமகன் வீட்டாருக்கு ‘ஷாக்’ கொடுத்த மணப்பெண்.. அடுத்த கணமே நடந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Aug 07, 2021 04:13 PM

மணப்பெண் திருமணத்தை நிறுத்தியதும் மணமகனின் குடும்பத்தை உறவினர்கள் சிறைபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bride calls off wedding after uncle gets injured by groom’s guests

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த புதன் கிழமை இராம் என்ற பெண்ணுக்கும், ஷாசத் என்பவருக்கும் திருமணம் நடக்க இருந்தது. வட மாநிலங்களில் சில திருமண நிகழ்வின் போது துப்பாக்கிசூடு நடத்துவது பல காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த திருமணத்திலும் துப்பாக்கிச்சூடு நடத்தி மணமகன் வீட்டார் உற்சாகமாக இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மணமகளின் மாமாவின் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதனால் மண்டபத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். இதனை அடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Bride calls off wedding after uncle gets injured by groom’s guests

இந்த சம்பவத்தை அடுத்து தனக்கு திருமணம் வேண்டாம் என மணப்பெண் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த குடும்பத்தின் முன்னிலையிலும் மணமகனின் குடும்பத்தினர் இதுபோல் நடந்து கொண்டால், தான் திருமணம் முடிந்து அவர்களின் வீட்டுக்கு சென்று அங்கு தனியாக இருக்கும் நேரத்தில் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? எனக் கேள்வி எழுப்பி திருமணத்தை மணப்பெண் நிறுத்தியுள்ளார்.

Bride calls off wedding after uncle gets injured by groom’s guests

மணமகள் இப்படி தெரிவித்ததும், வெகுண்டெழுந்த அவரின் குடும்பத்தினர் மணமகனின் காரை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் மணமகன் மற்றும் அவரது உறவினர்களை அடித்து தாக்கியதுடன் அவர்கள் அனைவரையும் சிறைபிடித்து வைத்திருந்தனர். இதனால் திருமண விழா கலவர இடமாக காட்சியளித்தது.

Bride calls off wedding after uncle gets injured by groom’s guests

தகவலறிந்து காவல்துறையினர் அங்கு வந்த பின்னரே சிறைபிடிக்கப்பட்ட மணமகன் வீட்டார் விடுவிக்கப்பட்டனர். இதனை அடுத்து மணமகளின் மாமாவை துப்பாக்கியால் சுட்டதாக மணமகன் ஷாசத், அவருடைய சகோதரர்கள் பப்பு, சனு ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கை காவல்துறையினர் பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bride calls off wedding after uncle gets injured by groom’s guests | India News.