'மகனை பார்க்க ஜெயிலுக்கு வந்த நேரத்தில்...' ஷாருக்கான் 'வீட்டிற்கு' விரைந்த 'போதைப் பொருள்' தடுப்புப் பிரிவு போலீசார்...! - உச்சக்கட்ட பரபரப்பு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையில் இருந்து கோவா செல்லும் கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாக தகவல் கிடைக்க அங்கு விரைந்து சென்ற போதை தடுப்பு பிரிவு போலீசார் கப்பலில் தீவிர சோதனை நடத்தினார்கள்.

சோதனையின் போது, போதைப்பொருள் உபயோகப்படுத்தியதாக பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான்கான், உள்பட பத்து பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனைத்தொடர்ந்து, ஆர்யன் கான் உட்பட 3 பேர் ஜாமீன் வழங்க கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று (20-10-2021) மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆர்யன் கான் உட்பட மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இதைத்தொடர்ந்து, ஜாமீன் கோரி ஆர்யன்கான் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆர்யன்கான் ஜாமின் மனுவை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை மும்பை உயர் நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க உள்ளது.
ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யான்கானை அவரது தந்தை ஷாருக்கான் இன்று (21-10-2021) காலை சந்தித்தார். ஆர்யான்கான் கைது செய்யப்பட்ட பின் ஷாருக்கான் முதன்முறையாக தற்போது தான் சந்தித்துள்ளார்.
இந்நிலையில், மும்பையில் உள்ள நடிகர் ஷாருக்கான் இல்லத்திற்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். சிறையில் உள்ள தனது மகன் ஆர்யன்கானை சந்தித்து ஷாருக்கான் பேசியுள்ள நிலையில் அவரது இல்லத்திற்கு போலீசார் சென்றுள்ளது.
போதைப்பொருள் விவகாரத்தில் மும்பையில் உள்ள நடிகை அனன்யா பாண்டே இல்லத்திற்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்றுள்ளது. போதைப்பொருள் விசாரணைக்காக மதியம் 2 மணிக்கு ஆஜராக நடிகை அனன்யாவுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
