கப்பலில் 'ட்ரக்ஸ்' யூஸ் பண்ணிய வழக்கில் 'அதிரடி' திருப்பம்...! இன்னும் 'அந்த' சம்பவத்தோட 'ரணமே' ஆறல, அதுக்குள்ள...' - கதிகலங்கி நிற்கும் பாலிவுட்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பெயரில் சொகுசு கப்பலில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த 3-ம் தேதி சொகுசு கப்பலில் சுமார் 1.33 லட்ச ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை கைப்பற்றியதோடு பாலிவுட்டை அதிர செய்யும் சம்பவம் ஒன்றும் நடைபெற்றது.
அந்த சொகுசு கப்பலில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், மாடல் அழகி முன்முன் டக்மிஷா உள்பட 8 பிரபலங்கள் பயணித்துள்ளனர். இதன் காரணமாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவர்களையம் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு நாட்களுக்கு முன் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஆரியன் கான் தாக்கல் செய்த மனுவை கோர்ட்டு நேற்று முன்தினம் (08-09-2021) தள்ளுபடி செய்து, ஆரியன் கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
தற்போது இந்த வழக்கில் பாலிவுட்டை கதிகலங்க வைக்கும் விதமாக மும்பையை சேர்ந்த பிரபல சினிமா தயாரிப்பாளர் இம்தியாஸ் ஹத்ரியின் வீடு மற்றும் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
ஷாருக்கான் மகன் கைது செய்யப்பட்ட அதிர்ச்சியே இன்னும் பாலிவுட்டில் தணியாத நிலையில் இம்தியாஸும் இதில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
