'அந்த பையன் தங்கமான புள்ள'... 'ஆனா அவன் செஞ்ச ஒரே ஒரு தப்பு இது மட்டும் தான்'... 'எங்களை மட்டும் ஏன் டார்கெட் பண்றீங்க'... கொதித்த சூசன் கான்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட்டைத் தொடர்ந்து டார்கெட் செய்கிறார்கள் என சுசானி கான் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு மும்பையிலிருந்து கோவாவுக்குச் சென்ற சொகுசு கப்பலில் நடைபெற்ற ஆடம்பர மது விருந்தில் ஆர்யன் கலந்து கொண்டார்.
அப்போது நள்ளிரவு நேரத்தில் அதிரடியாகப் புகுந்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கப்பலில் சோதனை நடத்தியபோது பலவித போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து ஆர்யன் கானை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டு வரும் 7ம் தேதி வரை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினரின் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் பெரும் அளவில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பலர் ஆர்யன் கான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதேநேரத்தில் சிலர் ஆர்யன் கான் திட்டமிட்டுச் சிக்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீது தவறு இல்லை எனவும் அவருக்கு ஆதரவாகக் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஷாருக்கானின் மனைவி கவுரி கானின் நெருங்கிய நண்பரும், கிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவியுமான சுசானி கான், ஆர்யன் கானுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுகையில், ''ஆர்யன் தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்தது தான் அவர் செய்த ஒரே தவறு.
அதேபோன்று பாலிவுட் பிரபலங்களைச் சிலர் குறிவைத்துத் தாக்கி வருகிறார்கள். அதன் விளைவாகவே தற்போது இந்த வழக்கில் ஆர்யன் கான் சிக்கி உள்ளான். அதோடு ஆர்யன் ஓர் நல்ல குழந்தை. நான் அவர்களின் பக்கம் நிற்கிறேன்'' சுசானி கான் தெரிவித்துள்ளார். சுசானி கானின் இந்த கருத்து சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் பலரும் இதுகுறித்து விவாதித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்
