'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே'.. டெல்லி கேபிடல்ஸின் ட்வீட்டுக்கு சிஎஸ்கேவின் ‘செம்ம’ ரிப்ளை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | May 19, 2019 02:09 PM
2019க்கான ஐபிஎல் சீசன் 12 மார்ச் இறுதியில் இனிதே தொடங்கி, ஏப்ரல் பாதியில் இனிதே நிறைவுபெற்றது.

இதன் இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னையை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்றது. முன்னதாக இந்த சீசன் முழுவதுமே சென்னை அணியின் முக்கிய வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் தாஹிர் தமிழில் ட்வீட்களை பறக்கவிட்டுக்கொண்டிருந்தனர்.
இந்த முறை அனைத்து மேட்சுகளும் முடிந்த பிறகு டெல்லி கேபிடல்ஸ் அணி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘#Yellove மற்றும் நல்ல கரகோஷத்துடன் நமது மோதல்கள் அனைத்துமே சிறந்த அனுபுவமாக இருந்தது’ என்று ட்வீட் பதிவிட்டுள்ளது. இந்த வைரல் தமிழ் ட்வீட் அனைவராலும் பகிரப்பட்டதை அடுத்து, இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பதிலிட்டுள்ளது.
அதன்படி, ‘மிக்க நன்றி! அந்த நாள் (2012) ஞாபகம் நெஞ்சிலே வந்தது! உங்களின் மிகப்பெரிய வெற்றி அனைவரின் மனதிலும் இடம் பிடித்தது தான்! வாழ்த்துகள்!’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து டெல்லி அதிகாரப்பூர்வ அணிக்கு பதிலிட்டுள்ளது. இந்த ட்வீட்கள் இணையத்தில் பரவி, ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#Yellove மற்றும் நல்ல கரகோஷத்துடன் நமது மோதல்கள் அனைத்துமே சிறந்த அனுபுவமாக இருந்தது 👌#ThankYouCSK for three super outings in VIVO @IPL 2019! 💪#ThisIsNewDelhi #DelhiCapitals pic.twitter.com/vJdVlw4t5a
— Delhi Capitals (@DelhiCapitals) May 19, 2019
