கொரோனா விஷயத்தில்... நாட்டிலேயே 'இந்த' 4 நகரங்கள் தான் பெஸ்ட்... மத்திய அரசு பாராட்டு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவை கட்டுப்படுத்துவதில் நாட்டிலேயே முன்மாதிரியாக விளங்கும் நகரங்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 4-வது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவற்றை தடுக்கவும், கட்டுக்குள் வைக்கவும் மத்திய, மாநில அரசுகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா விவகாரத்தில் நாட்டிலேயே முன்மாதிரியாக திகழும் 4 நகரங்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா இறப்பை கட்டுக்குள் வைத்திருப்பது, தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவற்றில் நாட்டிலேயே முன்மாதிரி நகரங்களாக இந்தோர், ஜெய்ப்பூர், சென்னை, பெங்களூர் ஆகிய 4 நகரங்கள் இருப்பதாக மத்திய அரசு பாராட்டி இருக்கிறது.
கொரோனா இறப்பு விகிதங்களை கட்டுக்குள் வைத்ததில் பெங்களூர், சென்னை நகரங்கள் முன்மாதிரியாக இருப்பதாகவும், கொரோனாவை கண்டறிய புதுமையான வழிகளை பின்பற்றியதில் இந்தோர் மற்றும் ஜெய்ப்பூர் நகரங்கள் முன்மாதிரியாக திகழ்வதாகவும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.