VIRAL PHOTO : "வைரலாகும் விராட்-அனுஷ்கா போட்டோ...' 'சில் அவுட்ல பக்காவா போட்டோ எடுத்துருக்கார்...' - போட்டோகிராஃபர் யாரு தெரியுமா...?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் நடுக்கடலில் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் காதல் மனைவி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படமானது நடுக்கடலில் இருப்பது போலவும், ஒருவர் ஒருவரை பார்த்துக் கொண்டிருப்பது போலவும் இருக்கிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த இரு பிரபலங்களின் ரசிகர்கள் இருவரும் கண்ணால் காதலை கடத்துவது போல இருக்கிறது எனவும், வாவ் கேப்டன், காதல் நிறைந்தவர், சிறந்த உறவுக்கான எடுத்துக்காட்டு எனக் கூறி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த காதல் புகைப்படத்தை கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தனது கேமிராவில் பதிவு செய்துள்ளார். விராட் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் இருவரும் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்கள்.
மேலும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் வரும் ஜனவரி 2021-ஆம் மூவராக போகிறோம் என்ற செய்தியையும் அவர்கள் இன்ஸ்டாவில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
