'கல்யாணமாகி 7 ஆண்டு, 2 குழந்தைகள்'... 'நெஞ்சை கல்லாக்கி கொண்டு மனைவியை திருமணம் செய்து கொடுத்த கணவன்'... அதிர்ச்சி காரணம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமனைவியை வேறொருவருக்குக் கணவரே திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையில் திருமணப் பந்தம் என்பது மிக முக்கியமானது. தனது வாழ்க்கையில் பாதியைத் தான் விரும்பிய ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ வாழ வேண்டும் என்பது பலரின் நெடு நாள் கனவாகவே இருக்கும். இரு மனங்கள் இணைத்தால் மட்டுமே அந்த திருமணப் பந்தம் என்பது நிலைக்கும். ஆனால் இரு மணங்கள் ஒன்றிணைத்து நடந்த திருமணத்தில் இப்படி ஒரு புயல் வீசும் என இந்த கணவர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் உத்தம் மண்டல். இவருக்கும் சப்னா குமாரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். மகிழ்ச்சியாகச் சென்ற இந்த தம்பதியரின் வாழ்க்கையில் திடீரென புயல் வீச ஆரம்பித்தது. சப்னாவுக்குக் கணவர் மண்டலின் உறவினர் ராஜு குமார் என்பவர் மீது திடீரென காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த மண்டல் அதிர்ந்து போனார்.
நமது வாழ்க்கை மகிழ்ச்சியாகத் தானே செல்கிறது. அதோடு நமக்கு 2 குழந்தைகள் கூட இருக்கிறார்களே இப்போது வந்து இப்படிக் கூறுவது நியாயமா என மண்டல் கேட்டுள்ளார். ஆனால் எனக்கு அவரை தற்போது பிடித்துள்ளது. அவர் தான் எனக்கு வேண்டும். இனி இருக்கும் மீதி வாழ்க்கையை நான் அவருடன் தான் வாழ விரும்புகிறேன் என, ராஜுகுமாரை திருமணம் செய்து கொள்வதில் சப்னா உறுதியாக இருந்தார். மண்டல் எவ்வளவோ எடுத்து கூறியும் சப்னா கேட்கவில்லை.
இதனால் வேறு வழி இல்லாமல், தனது மனதை கல்லாக்கி கொண்டு ராஜுகுமாரை சப்னாவுக்கு திருமணம் செய்து வைக்க மண்டல் முடிவு செய்தார். அதன்படி கோவில் ஒன்றில் வைத்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார் மண்டல். பின்னர் தம்பதிகள் மண்டல் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். அப்போது தன்னையும் அறியாமல் கதறி அழுதார் மண்டல். இந்த கட்சி அங்கிருந்தவர்ளை சோகத்தில் ஆழ்த்தியது.

மற்ற செய்திகள்
