‘இதுதான் என் கடைசி தேர்தல்’னு சொல்லவே இல்ல.. நான் சொன்னதை ‘தப்பா’ புரிஞ்சுக்கிட்டீங்க.. பீகார் முதல்வர் பரபரப்பு தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்த தேர்தலே எனது கடைசி தேர்தல் என ஒருபோதும் சொல்லவில்லை என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதில் 74 இடங்களை பாஜகவும், அதன் கூட்டணி கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களையும் கைப்பற்றியது. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த எச்ஏஎம்எஸ் கட்சியும், விஐபி கட்சியும் தலா 4 இடங்களில் வெற்றி பெற்றன. ஐக்கிய ஜனதா தளம் கட்சியை விட பாஜக அதிக இடங்களை வென்றிருந்தாலும் நிதிஷ்குமார்தான் முதல்வர் என பிரதமர் மோடி அறிவித்தார்.
தேர்தலுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ்குமார், பீகார் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். இந்த கூட்டணியே ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார். மேலும் முதல்வர் பதவிக்கு நான் உரிமை கோரவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில்தான் இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும். பதவியேற்பு விழா தீபாவளிக்கு பிறகு நடைபெறும் என்று தெரிவித்தார்.
அதேபோல் அரசியல் ஓய்வு என்ற வார்த்தைக்கே இடமில்லை என்றும் தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்றும் கூறினார். இது எனது கடைசி தேர்தல் பிரச்சார நாள் என்ற அர்த்தத்தில் தெரிவித்தேன். ஓய்வு பெறும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 5ம் தேதி, பூர்னியா தொகுதியில் பிரச்சாரத்தின் போது பேசிய நிதிஷ்குமார் , இதுதான் எனது கடைசி தேர்தல் பிரச்சாரம். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று கூறியதாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
