காணாமல் போன 'சிறுவன்'... "5 லட்சம்" பணம் வேணும்ன்னு வந்த 'ஃபோன்' கால்... 'போலீசார்' எறங்கி விசாரிச்சதுல,,.. குண்ட தூக்கி போட்ட 'ட்விஸ்ட்'!! - நடந்தது 'என்ன'??
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன், கடந்த 10 ஆம் தேதியன்று தனது வீட்டில் இருந்து கிளம்பி தனது நண்பனை பார்ப்பதாக கூறி சென்றுள்ளார். தன்னுடன் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மொபைல் போனை எடுத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த சிறுவனின் தாய்க்கு தொலைபேசியில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் உங்களது மகனை கடத்தி வைத்துள்ளதாகவும், ஐந்து லட்சம் கொடுத்தால் சிறுவனை விட்டு விடுவோம் எனக்கூறி மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைக் கேட்டு பதறிப் போன சிறுவனின் தாயார், உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளார்.
புகாரின் பெயரில் போலீசார் நடத்திய சோதனையில், பேருந்து நிலையம் ஒன்றின் அருகே வைத்து சிறுவனை கண்டுபிடித்தனர். தொடர்ந்து சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாயிடம் உள்ள பணத்திற்காக தான் கடத்தப்பட்டது போல நாடகமாடிய அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
தனது தாயார் மூன்றரை லட்சம் ரூபாய் லோன் எடுத்துள்ள தகவலை அறிந்து கொண்ட சிறுவன், தான் கடத்தப்பட்டது போல நாடகமாடி, மிரட்டிக் கேட்டால் தாயின் பணம் கிடைத்து விடும் என்பதற்காக சிறுவன் இந்த செயலில் ஈடுபட்டுள்ளான்.
அப்படி கிடைக்கும் அந்த பணத்தின் மூலம் டெல்லி அல்லது மும்பையில் கிரிக்கெட் அகாடமி ஒன்றில் சேர்ந்து கொள்ள ஆசைப்பட்டுள்ளான். அது மட்டுமில்லாமல் வீடியோ கேம் மீது அதிக ஆர்வம் கொண்ட சிறுவன், அந்த பணத்தில் விலையுயர்ந்த மொபைல் போன் ஒன்றை வாங்கவும் தீர்மானித்துள்ளான். தொடர்ந்து சிறுவனை அவனின் தாயாரிடம் போலீசார் அனுப்பினர்.
மொபைல் கேம்க்காக தாயிடம் இருந்தே பணத்தை திருட முயற்சித்த சிறுவனால் சற்று பரபரப்பு நிலவியது.