'பாரதியார் சிலை அப்படியே தான் இருக்கு...' 'ஆனா அதுல ஒண்ணு மட்டும் மிஸ்ஸிங்...' - கடும் அதிருப்தியில் மக்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாகவி பாரதியாரின் நினைவாக டெல்லியில் ஏற்படுத்தப்பட்ட அவரின் சிலையில் இருந்த கைத்தடி காணமால் போய் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் புரட்சியாளர் என அழைக்கப்படும் மகாகவி பாரதியாரின் 139வது பிறந்த நாள் விழா இன்று. அதையொட்டி நாடு முழுவதும் பல அரசியல் கட்சியினர், தேசிய தலைவர்கள், பள்ளி மாணவ மாணவிகள் என அனைவரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் டெல்லி லோதி சாலையில் சுபரமணிய மார்க் என்ற சாலையில் உள்ள பாரதியார் சிலைக்கும் பல்வேறு முக்கிய நபர்கள் மாலை அணிவித்தனர். அப்போது பாரதியார் கையில் வைத்திருக்கும் அவரது அடையாள சின்னமான கைத்தடியானது அங்கு இல்லாமல் காணமால் போய் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கூறிய அப்பகுதி ஊழியர்கள், கடந்த 4 நாட்களாக தான் பாரதியார் சிலையின் கையில் இருந்த தடியான இல்லாமல் உள்ளது. அதனை நாங்களும் கவனித்தோம். இதில் ஒருவேலை கைத்தடி இருப்பால் ஆனது என்பதால் யாராவது திருடி சென்று விட்டர்களா, அல்லது ஒருவேலை கீழே விழுந்து அதிகாரிகள் தரப்பில் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை என கூறினார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே.வாசன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோருக்கு உடனடியாக கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும், அரசியல் தலைவர்களிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
