‘பாஜக’வில் இணைகிறார் நடிகை குஷ்பு???’ ...’அவசர அவசரமாக டெல்லி கிளம்பி சென்றார்...’ ’தமிழக அரசியலில் திடீர் திருப்பம்...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக உள்ள நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி நாளை பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது. கடந்த சில நாட்களாக இது தொடர்பாக பல தகவல்கள் பரவி வந்த நிலையில், அது அனைத்தையும் நடிகை குஷ்பு மறுத்து வந்தார். அது மட்டுமில்லாமல், உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட போராட்டத்தில் குஷ்பு கலந்து கொண்டிருந்த நிலையில், தற்போது அவர் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதற்காக நடிகை குஷ்பு சற்று முன் டெல்லி கிளம்பிச் சென்றதாகவும், நாளை டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜக கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

மற்ற செய்திகள்
