Tiruchitrambalam D Logo Top

"இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப்போகிறோம்".. முதல்வர் முக ஸ்டாலின் அதிரடி ட்வீட். முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Aug 22, 2022 04:18 PM

இன்று சென்னை தினம் கொண்டாடப்படும் நிலையில், தமிழக மக்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Tamilnadu Chief minister MK Stalin wishes 383rd Chennai Day

Also Read | இது எப்படி இங்க வந்துச்சு.. அடர்ந்த காட்டுக்குள்ள நிற்கும் பிரம்மாண்ட விமானம்.. மேப்பை ஆராயும்போது தெரியவந்த விஷயம்.. வைரல் புகைப்படம்.!

சென்னை தினம்

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு 22 ஆம் தேதி சென்னை தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடைபெறுவது வாடிக்கை. 1639இல் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு ஹோகன் ஆகிய இருவரும் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவுவதற்காக அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரிடமிருந்து  செயின்ட் ஜார்ஜ் கோட்டை/தலைமைச் செயலகம் இருக்கும் இடத்தை வாங்கினர். இந்த அனுமதி பத்திரம் 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி எழுதப்பட்டதால் அதுவே சென்னை நகரம் உதயமான நாளாக கருதப்படுகிறது.

கொண்டாட்டம்

இந்த நாளை சிறப்பிக்கும் வகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆகஸ்டு 22 ஆம் தேதியும் சென்னை தினமாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் பலனாக பல்வேறு நிகழ்ச்சிகளை அரசே நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் மாநகராட்சி, இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிககளை ஏற்பாடு செய்திருந்தது.

Tamilnadu Chief minister MK Stalin wishes 383rd Chennai Day

இந்த விழாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இந்நிலையில், சென்னையின் 383 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

முதல்வர் வாழ்த்து

இதுதொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்கு இன்னைக்கு 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல். இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | மாத்திரை அட்டையில் மணமக்கள் பெயர்.. வினோத திருமண பத்திரிகையை பார்த்து வியந்துபோன தொழிலதிபர்.. அந்த Caption தான் செம்ம.!

Tags : #MKSTALIN #DMK #MK STALIN WISHES CHENNAI DAY #383RD CHENNAI DAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamilnadu Chief minister MK Stalin wishes 383rd Chennai Day | Tamil Nadu News.