"என்னை விட 10 வயது மூத்த பெண்ணை ஏமாத்தி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க".. புது மாப்பிள்ளை செஞ்ச காரியம்.. பதறிப்போன உறவினர்கள்.!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Aug 18, 2022 02:21 PM

திருமணமான 9 மாதத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு, காணாமல் போய்விட்டதாக காவல்துறையில் புகார் அளித்த புது மாப்பிள்ளையை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

Bengaluru man slays wife and files missing complaint

Also Read | "ஊர்லருந்து வந்ததை வெளில சொல்லிடாதீங்க".. மாமனாரிடம் துபாய் ரிட்டர்ன் மருமகன் கொடுத்த பெட்டி.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. அடுத்தடுத்து வந்த ட்விஸ்ட்..!

பீகாரை சேர்ந்தவர் பிரித்வி ராஜ் சிங். இவர் எலெக்ட்ரிசியனாக பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 9 மாதத்துக்கு முன்பாக இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. இருவீட்டாரின் சம்பதப்படியே இந்த திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணத்துக்கு முன்னர், மணப்பெண்ணின் வயதை 28 என பெண்வீட்டார் சொல்லியதாக தெரிகிறது. ஆனால், அவருக்கு 38 வயது ஆவதை அறிந்த பிரித்வி ராஜ் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

Bengaluru man slays wife and files missing complaint

இதனையடுத்து இருவருக்குள்ளும் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதை அடுத்து, மனைவியை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார் பிரித்வி ராஜ். இதனையடுத்து பீகாரில் உள்ள தனது நண்பரான சமீர் குமார் என்பவரை கர்நாடக மாநிலம் சீரடிக்கு வரச்சொல்லியிருக்கிறார் அவர். இதனையடுத்து ஆகஸ்டு 3 ஆம் தேதி சமீர் குமார் சீரடிக்கு வந்திருக்கிறார். அங்கு பெண்ணை இருவரும் கொலை செய்துவிட்டு அவரது உடலை காட்டுப்பகுதியில் வீசியிருக்கின்றனர்.

மனைவியை காணவில்லை

போலீசில் மாட்டிக்கொள்வோம் என பயந்த பிரித்வி ராஜ் காவல்துறையினரை குழப்ப தனது மனைவியை காணவில்லை என போலீசில் புகார் அளித்திருக்கிறார். அப்போது காவல்துறையினரிடத்தில்,"திருமணத்தின் போது அவருக்கு 28 வயதாகிறது என பெண்வீட்டார் கூறினர். ஆனால், அவருக்கு 38 வயதாவதை நாங்கள் கண்டுபிடித்தோம். அவர் என்னைவிட 10 வயது மூத்தவர். மேலும், தம்பதிய வாழ்க்கைக்கும் அவர் மறுப்பு தெரிவித்ததோடு, எனது பெற்றோரையும் அவமானப்படுத்தினார்" எனத் தெரிவித்திருக்கிறார்.

வழக்கமாக சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறினாலும் உடனடியாக வீட்டுக்கு திரும்பி விடுவார் என்றும், இந்த முறை அவர் வீடு திரும்பவில்லை என தெரிவித்த பிரித்வி ராஜ், தனது மனைவியின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.

Bengaluru man slays wife and files missing complaint

வெளிச்சத்துக்கு வந்த உண்மை

இதுகுறித்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் பிரித்வி ராஜின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்திருக்கின்றனர். விசாரணையில்  நண்பருடன் இணைந்து பிருத்வி ராஜ் தனது மனைவியை கொலை செய்ததை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்திருக்கின்றனர்.

இதனிடையே, காவல்துறையினர் உயிரிழந்த பெண்ணின் உடலை கண்டறிந்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read | "அது மெண்டல் டார்ச்சர் தான்".. கல்யாணமாகி 10 மாசத்துல டைவர்ஸ்.. மனைவி சொன்னதை கேட்டு அதிர்ச்சியான நீதிபதிகள்.. வெளியான பரபரப்பு தீர்ப்பு..!

Tags : #BENGALURU #MAN #WIFE #MISSING COMPLAINT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bengaluru man slays wife and files missing complaint | India News.