“இனி இப்படி பண்ணிதான் பாருங்களேன்!”.. “சாலைகளில் QR ஸ்கேனர் CODE-உடன் கண்ணாடி!”.. “கலக்கும்” சிட்டி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jan 17, 2020 12:30 PM

பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு பாடம் புகட்ட, Swachh Survekshan 2020 திட்டத்தின் கீழ் புதிய வழிமுறைகள் கையாளப்பட்டுள்ளன.

BBMP mirrors to deter people from urinating in public

463  ஸ்மார்ட் சிறுநீர் கழிப்பிட கிடங்குகள் இருப்பதாகக் குறிப்பிடும் பெங்களூரு நகர புரூஹத் பெங்களூரு மஹாநகர் பாலிகே திட்ட கமிஷனர், இத்தனை இருந்தும் பொது இடங்களிலும், சுவர்களிலும் சிறுநீர் கழிக்கும் பேர்வழிகளுக்கு பாடம் புகட்ட ஒரு புதிய யோசனையை புகுத்தியுள்ளார்.

அதன்படி, பொது இடங்களில் ஆங்காங்கே கண்ணாடிகள்

வைக்கப்பட்டுள்ளன. சிறுநீர் கழிக்க நினைப்பவர்கள் கண்ணாடி இருப்பதால் யோசிப்பார்கள். அதே சமயம், அந்த கண்ணாடிகளில், QR Code ஒன்று இருக்கும். ஸ்மார்ட் போன் கொண்டு அதை ஸ்கேன் செய்தால், அருகில் இ-டாய்லெட் எங்கு இருக்கிறது என்பதை அறிய முடியும்.  இந்த திட்டத்துக்கு பலரும் வரவேற்பினை தெரிவித்துள்ளனர்.

Tags : #BENGALURU