'ரன் எடுக்கக்கூட ஓடல'... 'பவுலர் செய்த காரியத்தால்'... 'வலியில் துடித்துப்போன பேட்ஸ்மேன்'... ரசிகர்கள் கண்டனம்...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று ரசிகர்களின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
![Video Lancashire Given 5 Penalty Runs After Batsman Hit By Throw Video Lancashire Given 5 Penalty Runs After Batsman Hit By Throw](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/video-lancashire-given-5-penalty-runs-after-batsman-hit-by-throw.jpg)
இங்கிலாந்தில் ஞாயிற்றுக்கிழமை கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் லங்காஷயர் மற்றும் லீசெஸ்டர்ஷயர் அணிகள் மோதியுள்ளன. லங்காஷயர் அணியின் பேட்ஸ்மேன் ஒருவருக்கு லீசெஸ்டர்ஷயர் பவுலர் டைட்டர் பந்து வீசியுள்ளார். அதை பேட்ஸ்மேன் ஸ்ட்ரெய்ட் டிரைவ் செய்ய, பவுலர் கைகளில் பந்து சிக்கியுள்ளது. அப்போது பந்தை பிடித்த நொடியில் அவர் பேட்ஸ்மேனை நோக்கி அதை மிக வேகமாக வீசி எறிய, பந்து பேட்ஸ்மேனின் காலை பலமாக தாக்கியுள்ளது.
ரன் எடுக்கக்கூட முயற்சிக்காத நிலையில், தாக்கப்பட்டதில் வலியில் துடிதுடித்துப் போய் பேட்ஸ்மேன் அப்படியே காலை பிடித்தபடியே நகர்ந்து சென்றுள்ளார். ஐசிசி விதிப்படி இது லெவல் 2 குற்றம் என்பதால் பேட்டிங் செய்த அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற மிக ஆபத்தான செயல்பாடுகளுக்கு மிக அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டுமென இதற்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.
🤷♂️
A five-run penalty is handed to Leicestershire for this incident with Dieter Klein
Match Centre ➡ https://t.co/pd9c61XXvR pic.twitter.com/WJT2SRCnFW
— Lancashire Cricket (@lancscricket) August 2, 2020
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)